வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தில்லி சர்வதேச தோல் கண்காட்சி - 2025 பிப்ரவரி 20-21 தேதிகளில் யஷோபூமியில் நடைபெறும்
Posted On:
06 FEB 2025 2:23PM by PIB Chennai
தோல் ஏற்றுமதிக்கான கவுன்சிலானது தில்லி சர்வதேச தோல் கண்காட்சி 2025-ஐ பிப்ரவரி 20-21 தேதிகளில் புதுதில்லி ஐசிசி துவாரகாவில் உள்ள யஷோபூமியில் நடத்துகிறது. இந்தக் கண்காட்சியானது உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தங்கள் சமீபத்திய தயாரிப்புகள், புதுமைப் படைப்புகள் மற்றும் திறன்களை சாத்தியமான ஆதார மாற்றுகளைத் தேடும் சர்வதேச வாங்குபவர்களுக்கு காட்சிப்படுத்த ஒரு வலுவான தளத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முதன்மையான நிகழ்வாகும். "இந்தியாவில் தயாரிப்போம்" மற்றும் "தற்சார்பு இந்தியா" முன்முயற்சிகளுடன் இணைந்து, இந்தக் கண்காட்சி ஏற்றுமதிகளை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உலகச் சந்தைகளில் இந்தியாவின் இருப்பை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்க அரசு பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளது. ஈரமான நீல தோல் மீதான அடிப்படை சுங்க வரி பிப்ரவரி 2, 2025 முதல் 10% இலிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தொழில்துறையினரின் முக்கியமான கோரிக்கையை பூர்த்தி செய்கிறது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் குறிப்பாக காலணித் துறையில், உற்பத்தித்திறன், தரம் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துதல், ரூ.4 லட்சம் கோடி வருவாய் ஈட்டுதல் மற்றும் ரூ.1.1 லட்சம் கோடி ஏற்றுமதியை உருவாக்குதல் மற்றும் 22 லட்சம் வேலைகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100219
***
TS/PKV/AG/RR
(Release ID: 2100266)
Visitor Counter : 43