சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

15-வது சர்வதேச உலக மருந்தியல் கூட்டத்தில் மத்திய சுகாதார, குடும்ப நல இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் சிறப்புரை

Posted On: 05 FEB 2025 4:24PM by PIB Chennai

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல  இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல்அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மருந்தியல் ஆணையம் ஏற்பாடு  செய்துள்ள 15-வது சர்வதேச உலக மருந்தியல் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் சர்வதேச அளவில் மருந்தியல் துறை தலைவர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள், தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மருந்துப் பொருட்களின் தரநிலைகள் மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் திருமதி படேல், சர்வதேச தரத்தில் மருந்து பொருட்களின் தரத்தை உறுதிசெய்தல். ஒழுங்குமுறை  நடைமுறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.  மருந்துகளுக்கான உலகின் மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  தரமான மருந்துகளை உற்பத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மருந்தியல் துறையில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவத்றகான முக்கிய தளமாக இந்த சர்வதேச அளவில் மருந்தியல்  கூட்டம் அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

இந்தக் கூட்டத்தில் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான செய்திமடல் ஒன்றையும், வீடியோ பதிவையும் அமைச்சர்  வெளியிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2100015  

***

TS/SV/AG/KR

 


(Release ID: 2100042) Visitor Counter : 32


Read this release in: English , Urdu , Hindi