விவசாயத்துறை அமைச்சகம்
விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்
Posted On:
04 FEB 2025 6:58PM by PIB Chennai
விவசாயிகளுக்கு சமீபத்திய திறன் தேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அரசு பின்வரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கிராமப்புற இளைஞர்கள் மற்றும் விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளில் உள்ள விவசாயிகளுக்கு அவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தவும், கிராமப்புறங்களில் ஊதியம்/சுய வேலைவாய்ப்பை மேம்படுத்தவும், குறுகிய கால திறன் பயிற்சியை (7 நாட்கள்) வழங்கும் நோக்கத்துடன் அரசு கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சியை செயல்படுத்தி வருகிறது. திறன்மிக்க மனிதவளக் குழுவை உருவாக்குவதற்காக விவசாயம் சார்ந்த தொழில் பகுதிகளில் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு குறுகிய கால திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களை வழங்குவதை இந்தக் கூறு இலக்காகக் கொண்டுள்ளது.
ஒற்றைச் சாளர வேளாண்சார் அறிவு, வள ஆதாரம் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்களாக செயல்படும் வகையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் செயல்முறை விளக்கங்கள் மூலம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. வேளாண் அறிவியல் மையம் தனது செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் பல்வேறு அம்சங்களில் அவர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிகளை அளித்து வருகிறது.
வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) என்று பிரபலமாக அறியப்படும் 'விரிவாக்க சீர்திருத்தங்களுக்கான மாநில விரிவாக்க திட்டங்களுக்கு ஆதரவு' என்ற மத்திய அரசின் நிதியுதவி திட்டம் நாடு முழுவதும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் பயிற்சி, செயல்விளக்கங்கள் போன்ற பல்வேறு தலையீடுகள் மூலம் விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த பகுதிகளின் பல்வேறு கருப்பொருள் பகுதிகளில் சமீபத்திய வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் நல்ல வேளாண் நடைமுறைகளை கிடைக்கச் செய்வதற்கும், விரிவாக்க அமைப்புக்கு புத்துயிரூட்டுவதற்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் நாட்டில் பரவலாக்கப்பட்ட விவசாயிகளுக்கு இணக்கமான விரிவாக்க முறையை இத்திட்டம் ஊக்குவிக்கிறது. தற்போது, இந்த திட்டம் நாட்டில் 28 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் உள்ள 739 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இத்தகவலை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099758
------
RB/DL
(Release ID: 2099892)
Visitor Counter : 63