பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், குறிப்பாக காஷ்மீரி பண்டிட்டுகளின் மனித உரிமைகள் சார்ந்த கவலைகள் குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் எடுத்துரைக்கப்பட்டது
Posted On:
04 FEB 2025 4:54PM by PIB Chennai
மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்புகள்), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், குறிப்பாக காஷ்மீரி பண்டிட்டுகளின் மனித உரிமைகள் சார்ந்த கவலைகள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் திரு பிரியங்க் கனுங்கோ விளக்கினார்.
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின், குறிப்பாக மூன்று தசாப்தங்களாக கொலைகள் மற்றும் கஷ்டங்களை அனுபவித்தபோதும், முந்தைய அரசுகளால் உரிய அல்லது நீதி மறுக்கப்பட்ட காஷ்மீரி பண்டிட் சமூகத்தினரின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனது பொறுப்பை தேசிய மனித உரிமைகள் ஆணையம் மிகவும் உணர்ந்துள்ளது என்று திரு கனுங்கோ அமைச்சரிடம் கூறினார். காஷ்மீரி பண்டிட் சமூகத்தின் நலன் மற்றும் அக்கறை எப்போதும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்னுரிமைகளில் மையமாக உள்ளது என்று டாக்டர். ஜிதேந்திர சிங் கூறினார்.
"காஷ்மீரி பண்டிட்களின் அவலநிலை தனித்துவமானது, ஏனெனில் அவர்கள் ஒரே இரவில் தங்கள் சொந்த நாட்டிற்குள் அகதிகளாக்கப்பட்டனர்", என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்தக் குடும்பங்களின் நலனுக்கான திரு மோடி அரசின் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார். பிராந்தியத்தில் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்துவதற்கான அரசின் அணுகுமுறையில் நம்பிக்கை தெரிவித்த அமைச்சர், தேசிய மனித உரிமைகள் ஆணையத்துடன் இணைந்து நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைகள் மற்றும் பணியாளர்கள் நலன் மற்றும் பயிற்சித் துறை ஆகிய இரண்டும் திறம்பட ஒத்துழைக்கும் என்று உறுதியளித்தார். குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஆணையத்துடன் உடன் இணைந்து குடிமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட பொறிமுறையை உறுதி செய்வோம் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099639
------
(Release ID: 2099639)
RB/DL
(Release ID: 2099884)