கூட்டுறவு அமைச்சகம்
தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்தின் உள்ளகப் பயிற்சித் திட்டம்
Posted On:
04 FEB 2025 3:25PM by PIB Chennai
கூட்டுறவு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ நிறுவனமான தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (என்சிடிசி), கூட்டுறவு நண்பன் உள்ளகப் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் பின்வருமாறு:-
தொழில்கல்வி பட்டதாரிகளுக்கு என்சிடிசி மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பங்கு, பங்களிப்பு மற்றும் தாக்கம் குறித்து ஆழமான புரிதல் வாய்ப்பை வழங்குதல்.
தொழில்முறை பட்டதாரிகளை, என்சிடிசி மற்றும் கூட்டுறவு சங்கங்களின் சூழல் மற்றும் நடைமுறைச் செயல்பாடுகளைக் கற்றுக்கொள்ளச் செய்தல்.
தொழில்கல்வி பட்டதாரிகளை கூட்டுறவு வணிக மாதிரிக்கு வழிநடத்துதல் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களில் அவர்களை ஈடுபடுத்துதல்.
கூட்டுறவுச் சட்டங்களின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட உழவர் உற்பத்தி அமைப்பில் தலைமைத்துவத்தை ஏற்றல் அல்லது தொழில்முனைவோராக மாறுதல்.
வேளாண்மை, பால்வளம், கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், மீன்வளம், தோட்டக்கலை, ஜவுளி, கைத்தறி அல்லது தகவல் தொழில்நுட்பம் போன்ற தொழில்கல்வி தகுதிகளைக் கொண்ட தனிநபர்கள் கூட்டுறவு நண்பன் உள்ளகப் பயிற்சித் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள். கூடுதலாக, வேளாண் வணிகம், கூட்டுறவு மேலாண்மை, எம்.காம், எம்சிஏ, நிதி, சர்வதேச வர்த்தகம், வனவியல், கிராமப்புற மேம்பாடு அல்லது திட்ட மேலாண்மை ஆகியவற்றில் எம்பிஏ படிப்பவர்களும் அல்லது முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கான தேர்வு செயல்முறை அவர்களின் தனவிவர தரவு மற்றும் நிதியுதவி நிறுவனங்களின் பரிந்துரையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இதைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099559
***
TS/PKV/AG/DL
(Release ID: 2099805)
Visitor Counter : 31