உள்துறை அமைச்சகம்
தேசிய பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ள அபாய குறைப்புத் திட்டம்
Posted On:
04 FEB 2025 2:44PM by PIB Chennai
அருணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ள அபாய குறைப்பு திட்டத்தை (Glacial Lake Outburst Flood -GLOF) செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பேரிடர் தணிப்பு நிதியத்திலிருந்து மத்திய அரசின் பங்கு ரூ.135.00 கோடியும், மாநிலங்கள் தங்கள் சொந்த நிதியிலிருந்து ரூ.15.00 கோடியும் பங்களிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.1.83 கோடி, ரூ.8.35 கோடி முறையே அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில அரசுகளுக்கு 17.10.2024 அன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்துடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் ஆபத்து இடர் மதிப்பீடு, கண்காணிப்பு, தணிப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு உருவாக்கமும் திறன் மேம்பாடும் ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
-----
TS/PLM/KPG/KR/DL
(Release ID: 2099779)
Visitor Counter : 21