நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
நாடாளுமன்றத்தில் அமைச்சர்களின் உறுதிமொழிகள் முறையாகக் கண்காணிக்கப்படுவதையும், நிறைவேற்றப்படுவதையும் உறுதி செய்வது ஆன்லைன் உத்தரவாதக் கண்காணிப்பு முறையின் நோக்கமாகும்
Posted On:
04 FEB 2025 1:46PM by PIB Chennai
நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஆன்லைன் உத்தரவாதக் கண்காணிப்பு முறையானது நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் அளிக்கும் உறுதிமொழிகள் முறையாகக் கண்காணிக்கப்படுவதையும், நிறைவேற்றப்படுவதையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு மின்னணு தளமாகும். இது முக்கிய அம்சங்கள் மற்றும் வழிமுறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது.
மையப்படுத்தப்பட்ட பதிவை பராமரித்தல்: இது அனைத்து உறுதிமொழிகளும் பதிவு செய்யப்படும் ஒற்றை மின்னணு முறையாகும். இது வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்கிறது
தானியங்கி அறிவிப்புகள்: நிலுவையில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்காக செயல்பட வேண்டிய காலக்கெடுவைப் பராமரிக்க, அனைத்து தொடர்புடையவர்களுக்கும் இந்த அமைப்பு சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை அனுப்புகிறது.
நிகழ்நேர புதுப்பிப்புகள்: அமைச்சகங்கள் மற்றும் துறைகள் முன்னேற்ற புதுப்பிப்புகளை நேரடியாக அமைப்பில் பதிவு செய்யலாம். தொடர்புடையவர்களுக்கு துல்லியமான மற்றும் புதுப்பித்த தகவல்களை உறுதி செய்யலாம்.
உத்தரவாதங்களின் வகைப்பாடு: உத்தரவாதங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:-
நிலுவையில் உள்ளவை: இன்னும் செயல்பாட்டில் உள்ள உத்தரவாதங்கள்.
செயல்படுத்தப்பட்டவை: நிறைவேற்றப்பட்ட உத்தரவாதங்கள்.
கைவிடப்பட்டது: ஆவணப்படுத்தப்பட்ட காரணங்களுடன், இனி செயல்படுத்த முடியாத உத்தரவாதங்கள்.
டிஜிட்டல் பணிப்பரவல் அமைப்பு: பதிவுசெய்தல் முதல் தீர்வு வரை கட்டமைக்கப்பட்ட செயல்முறை மூலமாக தளம் உத்தரவாதங்களை நிர்வகிக்கிறது,
நிகழ்நேர தகவல்: ஒரு நிகழ் நேர தகவல் உத்தரவாதத் தரவின் காட்சி பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது.
இந்தத் தகவலை நாடாளுமன்ற விவகாரம், தகவல், ஒலிபரப்பு இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் நேற்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.aa
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099505
***
(Release ID: 2099505)
TS/IR/RR/KR
(Release ID: 2099588)
Visitor Counter : 23