அணுசக்தி அமைச்சகம்
மத்திய பட்ஜெட்டில் அணுசக்தி
Posted On:
03 FEB 2025 6:23PM by PIB Chennai
நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அணுசக்தி மூலமான எரிசக்தி குறிப்பிடத்தக்க வகையில் பங்களிப்பு செய்யும்.
-பிரதமர் நரேந்திர மோடி
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் நாட்டின் நீண்டகால எரிசக்தி மாற்றத்திற்கான உத்திசார் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அணுசக்தி குறிப்பிடப்பட்டு உள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் 100 கிகாவாட் அணுமின் உற்பத்தி திறனை நிறுவ மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நாட்டின் எரிசக்தித் தேவையில் அணுமின் உற்பத்தி முக்கிய அங்கமாக உள்ளது. இது வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை அடைவதில் உள்ள விரிவான நோக்கங்களுடன் இணைந்ததாகவுள்ளது. இது எரிசக்தி உற்பத்திக்கான நம்பகத்தன்மையையும் உறுதி செய்கிறது. புதைபடிம எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது.
இந்த இலக்கை அடைய, உள்நாட்டு அணுசக்தி தொழில்நுட்பம், பொதுத்துறை-தனியார் துறை ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்தல், உத்திசார் கொள்கைகளை வகுத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எரிசக்தி பாதுகாப்பில் நிலைத்தன்மையை அடைவதற்கு அணுமின் உற்பத்தி ஒரு முக்கிய அங்கமாக அங்கீகரிக்கப்ட்டு, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான அணுசக்தி இயக்கத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி உள்நாட்டு அணுசக்தி திறனை மேம்படுத்தவும், தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், சிறிய அணுமின் உலைகளை மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099244
***
TS/SV/RJ/KV
(Release ID: 2099362)
Visitor Counter : 21