சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உணவக மேலாண்மை நிறுவனங்களில் பொதுத்துறை -தனியார் கூட்டாண்மை மாதிரி

प्रविष्टि तिथि: 03 FEB 2025 4:34PM by PIB Chennai

சுற்றுலாத் துறையில் திறன் மேம்பாடு தொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் பொதுத்துறை-தனியார் கூட்டாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் விவரம் பின்வருமாறு:

விருந்தோம்பல், சந்தைப்படுத்துதல், வணிக முத்திரை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பான பாடத்திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக மத்திய சுற்றுலா அமைச்சகம், தொழில்துறை தலைவர்கள், உணவக மேலாண்மை நிறுவனத்தின் கல்வியாளர்களை உள்ளடக்கிய பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

விருந்தோம்பல், சேவை, பராமரிப்பு ஆகியவற்றில் உயர் தரத்திலான பயிற்சியாளர்களாக உருவாக்கவும், தனிநபர்கள், நிபுணர்களை உருவாக்கவும் வேண்டும் என்ற நோக்கில் எட்டு முன்னணி விருந்தோம்பல் குழுக்களுக்கும்  21 மத்திய உணவக மேலாண்மை நிறுவனங்களுக்கும்இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

தொழில்-கல்வித்துறை இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், பரிசோதனை முயற்சியாக விரிவுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முன்னோடி நோக்கமாக இது அமைந்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொழில்முனைவிற்கான முன்முயற்சிகள், புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு அளிப்பது போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த தகவலை மத்திய சுற்றுலா, கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099161   

***

TS/SV/RJ/KV


(रिलीज़ आईडी: 2099287) आगंतुक पटल : 44
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu