சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

 சுற்றுலா அமைச்சகம்  கும்பமேளாவில் தகவல்களை வழங்க ஒரு சிறப்பு இந்திய அரங்கை அமைத்துள்ளது

Posted On: 03 FEB 2025 4:30PM by PIB Chennai

 

மகா கும்பமேளா 2025, உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஒழுங்கமைத்தல், மேம்படுத்துதல் ஆகியவை மாநில அரசின் பொறுப்பாகும்.

சுற்றுலா அமைச்சகம் பல்வேறு முயற்சிகள் மூலம் மகா கும்பமேளா 2025-ஐ விளம்பரப்படுத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள், ஊடகங்கள் போன்றவர்களை வரவழைத்து தகவல்களை வழங்க அமைச்சகம் கும்பமேளா பகுதியில் ஒரு சிறப்பு இந்திய அரங்கை அமைத்துள்ளது. புதிய திட்டங்கள், பல்வேறு சுற்றுலா தொகுப்புகள், விமானத் தேர்வுகள், தங்குமிடங்கள் போன்றவற்றின் மின்னணு சிற்றேடு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. கூடுதலாக, சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு பிரத்யேக மகா கும்ப மேளா சுற்றுலா தகவல் தொடர்புவசதி (1800111363) அமைக்கப்பட்டுள்ளது.

மகா கும்பமேளாவின் விளம்பரம் சுற்றுலா அமைச்சகத்தின் சமூக ஊடகங்கள் மூலமாகவும் செய்யப்படுகிறது.

சுற்றுலா அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், பிரயாக்ராஜின் டெண்ட் சிட்டியில் 80 சொகுசு கூடார தங்குமிடங்களை அமைத்துள்ளது.

கலாச்சார அமைச்சகம் வட மத்திய மண்டல கலாச்சார மையம் மூலம் மேளா பகுதியில் கலாகிராம் என்ற கலாச்சார கிராமத்தை அமைத்துள்ளது, இதில் அனுபூத் மண்டபம், கலைஞர்களின் நிகழ்ச்சிகள், உணவுப்பகுதி, பாரம்பரிய இந்திய கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறிகளின் காட்சி மற்றும் விற்பனை போன்றவை இடம்பெறுகின்றன.

இந்தத் தகவலை மத்திய சுற்றுலா, கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099159  

***

TS/IR/AG/KV

 

 


(Release ID: 2099258) Visitor Counter : 34


Read this release in: English , Urdu , Hindi