கலாசாரத்துறை அமைச்சகம்
குரு-சிஷ்ய பரம்பரைத் திட்டம்
Posted On:
03 FEB 2025 4:16PM by PIB Chennai
மத்திய கலாச்சார அமைச்சகம் 'குரு-சிஷ்ய பரம்பரை முறையை மேம்படுத்துவதற்கான நிதி உதவி (பதிவு மானியம்)' என்ற பெயரில் திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் குரு-சிஷ்ய பரம்பரைக்கு இணங்க, இசை, நடனம், நாடகம், நாட்டுப்புறக் கலை போன்ற கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள தகுதியுள்ள கலாச்சார அமைப்புகளுக்கு, அந்தந்த அமைப்புகளின் குருவால் கலைஞர்கள்/சிஷ்யர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக நிதி உதவி வழங்கப்படுகிறது.
குரு-சிஷ்ய பரம்பரை (பதிவு மானியம்) திட்ட வழிகாட்டுதல்களின்படி, மானியங்களைப் பெற விரும்பும் அமைப்புகள், அதன் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய தேர்வுக்காக ஆண்டுதோறும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் அனைத்து வகையிலும் இந்த நோக்கத்திற்காக அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. திட்ட வழிகாட்டுதல்கள், நிறுவனங்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் / செயல்பாடுகள் / வளங்கள், நிதி உதவிக்கான நியாயப்படுத்தல், அமைப்பின் குரு/பிரதிநிதியுடனான தொடர்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நிபுணர் குழு தனது பரிந்துரைகளை வழங்குகிறது.
இந்த திட்டத்தின்கீழ், நாடகத் துறையில் 1 குருவுக்கும், அதிகபட்சம் 18 சிஷ்யர்களுக்கும், இசை மற்றும் நடனத் துறையில் 1 குருவுக்கும், அதிகபட்சம் 10 சிஷ்யர்களுக்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது.
உதவித் தொகை: ஒவ்வொரு குரு/இயக்குனருக்கும் மாதந்தோறும் ரூ.15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) உதவித் தொகை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099145
***
TS/SV/RJ/KV
(Release ID: 2099256)
Visitor Counter : 26