நிலக்கரி அமைச்சகம்
நிறுவனங்களின் சொந்த உற்பத்தி மற்றும் வர்த்தக சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி ஜனவரி மாதத்தில் 19 மெட்ரிக் டன்னைத் தாண்டியது
प्रविष्टि तिथि:
03 FEB 2025 12:04PM by PIB Chennai
2024-25-ம் நிதியாண்டிற்கான நிலக்கரி உற்பத்தி 150.25 மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் மொத்த உற்பத்தியான 147.12 மெட்ரிக் டன் என்ற அளவை 2025, ஜனவரி 27 அன்று தாண்டியது. இது திட்டமிடப்பட்ட இலக்கை விட 64 நாட்கள் முன்னதாகும். இது 2024 ஜனவரி இறுதியில் உற்பத்தி 112.08 மெட்ரிக் டன்னோடு ஒப்பிட 34.05% ஆண்டு வளர்ச்சியைக் குறிக்கிறது. இது இந்தியாவின் நிலக்கரித் துறையின் துரிதப்படுத்தப்பட்ட விரைவைச் சுட்டிக்காட்டுகிறது.
இதேபோல், நிலக்கரி விநியோகமும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜனவரி 11 வரை மொத்த விநியோகம் 154.61 மெட்ரிக் டன்னை எட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் மொத்த விநியோகமான 142.79 மெட்ரிக் டன்னை விட அதிகமாகும். இது 2024 ஜனவரி 115.57 மெட்ரிக் டன்னிலிருந்து 33.75% அதிகரிப்பை பிரதிபலிக்கிறது. இது மின்சாரம், எஃகு மற்றும் சிமெண்ட் உள்ளிட்ட முக்கிய தொழில்களுக்கு நிலையான மற்றும் தடையற்ற நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்கிறது.
நிலக்கரி உற்பத்தி 2025 ஜனவரியில் 19.20 மெட்ரிக் டன் என்ற அளவானது நிறுவனங்களின் சொந்த உற்பத்தி மற்றும் வணிக சுரங்கங்களில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மாதாந்திர உற்பத்தியை குறிக்கிறது. இந்த சாதனை 2024 ஜனவரியில் 14.42 மெட்ரிக் டன்னிலிருந்து ஆண்டுக்கு ஆண்டு 33.15% அதிகரிப்பைக் குறிக்கிறது. ஜனவரியில் நிலக்கரி விநியோகம், இதேபோல் 17.26 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ஆண்டுக்கு ஆண்டு 32.45% அதிகரிப்பாகும். இது தொழில்துறை வளர்ச்சிக்கான விநியோகத்தை மேலும் உறுதி செய்கிறது.
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதற்கும், இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதற்கும், நாட்டிற்கான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நிலக்கரி அமைச்சகம் அதன் உறுதிப்பாட்டில் உறுதியாக உள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா - தற்சார்பு இந்தியா என்ற நிலையை அடைவதில் இந்தத் துறை தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099037
***
TS/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2099125)
आगंतुक पटल : 55