சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'நமது பொதுவான எதிர்காலத்திற்காக ஈரநிலங்களைப் பாதுகாத்தல்' என்ற கருப்பொருளில், உலக ஈரநில தினம் 2025 கொண்டாடப்பட்டது.

Posted On: 02 FEB 2025 6:40PM by PIB Chennai

'நமது பொதுவான எதிர்காலத்திற்காக ஈரநிலங்களைப் பாதுகாத்தல்' என்ற கருப்பொருளில், உலக ஈரநில தினம் 2025 கொண்டாடப்பட்டது.

 

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், பிப்ரவரி 2 அன்று உத்தரப்பிரதேச மாநிலம்  கோண்டாவில் உள்ள  பார்வதி அர்கா ராம்சார் தளத்தில் உலக ஈரநில  தினம் 2025 கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு. கீர்த்தி வர்தன் சிங், உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் மற்றும்  மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த பிரமுகர்கள்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

 

 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் நிலையான வாழ்வாதாரம் ஆகியவற்றில் ஈரநிலங்களின் முக்கிய பங்கை இந்நிகழ்வு எடுத்துரைத்தது. இந்த ஆண்டு 'நமது பொதுவான எதிர்காலத்திற்காக ஈரநிலங்களைப் பாதுகாத்தல்என்ற கருப்பொருளுடன் விழா நடைபெற்றது.

 

 

2025 ஆம் ஆண்டு உலக ஈரநில தினத்தையொட்டி, ஈரநிலங்களை எதிர்காலத்தில் பாதுகாப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ்முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈரநிலங்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்ததற்காக சமூக ஊடகங்கள் வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு  நன்றி தெரிவித்தார். "இந்த அணுகுமுறையின் காரணமாகவே நமது ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 89ஐ எட்டியுள்ளது. ராம்சார் தளங்களின் தொடர்ச்சியான வளர்ச்சியுடன், இயற்கையைப் பாதுகாப்பதிலும், வளப்படுத்துவதிலும்  இந்தியா உறுதிப்பாட்டைக் காட்டுகிறது" என்று அமைச்சர் கூறினார்.

 

 

கோண்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், அயோத்தி மற்றும் தேவி படான் இடையே புதிய இயற்கை-கலாச்சார சுற்றுலா வழித்தடத்திற்கான திட்டங்களை அறிவித்தார், இது வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார். நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கான பார்வதி ஆர்காவின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார் மற்றும் இந்திய கலாச்சாரம் எப்போதும் இயற்கை பாதுகாப்பை மதிப்பதாகக் கூறினார். 100 க்கும் மேற்பட்ட ஈரநிலங்களைக் கொண்ட கோண்டா மாவட்டம், ‘ஈரநில நகரமாகஅங்கீகரிக்கப்படுவதற்கான வலுவான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

இந்த நிகழ்வின் போது பார்வதி அர்கா ராம்சார் தளத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம்’, ‘இந்தியாவின் 85 ராம்சார் தளங்களின் ஃபேக்ட்புக்’, ‘வான் டவுங்யா கிராமங்களின் வளர்ச்சிஉள்ளிட்ட பதிப்புகளை வெளியிட்டனர். மேலும் கோண்டா மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதற்காக, உத்தரப்பிரதேச அரசின் ஒரு முன்முயற்சியின் கீழ்  அமேசான் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098981

 

 

 

(Release ID: 2098981)

 

 

***


(Release ID: 2099106) Visitor Counter : 12


Read this release in: Urdu , English , Hindi , Bengali