பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படை அரை மராத்தானின் துவக்கப் பதிப்பு
Posted On:
02 FEB 2025 6:26PM by PIB Chennai
இந்திய கடற்படை அரை மராத்தானின் துவக்கப் போட்டி பிப்ரவரி 25 அன்று புது தில்லியில் நடத்தப்பட்டது. 21.1 கி.மீ, 10 கி.மீ மற்றும் 5 கி.மீ ஓட்டங்கள் ஆகிய மூன்று பிரிவுகளில் 10,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முதன்மையான பந்தயங்களான 21.1 கி.மீ மற்றும் 10 கி.மீ ஓட்டங்களை இந்திய மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் எல் மாண்டவியா, முப்படைகளின் தலைமைத் தளபதி, கடற்படைத் தலைமைத் தளபதி, விமானப்படைதலைமைத் தளபதி ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த மைல்கல் நிகழ்வு அனைத்து தரப்பு பங்கேற்பாளர்களிடையேயும் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, உடல் செயல்பாடுகளைத் தழுவவும், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றவும் அவர்களை ஊக்குவிக்கிறது. இந்த நிகழ்வு தோழமை மற்றும் போட்டி உணர்வை வளர்த்து, இந்திய கடற்படையுடன் வலுவான பிணைப்பை உருவாக்க மக்களை ஒன்றிணைத்தது. தைரியம், ஒழுக்கம் மற்றும் தேசத்திற்கு சேவை செய்வதற்கு இணையான இந்திய கடற்படையில் சேர இளைஞர்களை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய கடற்படை அரை மராத்தானின் மகத்தான வெற்றி, பங்கேற்பாளர்களின் குறிப்பிடத்தக்க செயல்திறனால் மேலும் பிரபலமடைந்தது. வெவ்வேறு வயதுப் பிரிவுகள் மற்றும் தொழில்முறை பின்னணியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் சகிப்புத்தன்மை, உறுதிப்பாடு மற்றும் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தியது, இந்த நிகழ்வை அனைவருக்கும் ஒரு எழுச்சியூட்டும் காட்சியாக மாற்றியது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்கள் சிறந்த உடல் மற்றும் மன உறுதியை வெளிப்படுத்தியது, எதிர்கால பங்கேற்பாளர்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098968
(Release ID: 2098968)
***
(Release ID: 2099104)
Visitor Counter : 22