குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்தியாவின் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் உலகத்தரம் வாய்ந்த நிர்வாகத்தையும் கும்பமேளா பிரதிபலிக்கிறது: குடியரசுத் துணைத் தலைவர்
Posted On:
02 FEB 2025 9:32PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் மக்களுக்கு பட்ஜெட் உற்சாகம் மற்றும் எனக்கு கும்பமேளா உற்சாகம். வரி செலுத்தும் மக்களுக்கு பட்ஜெட் ஊக்கமளிப்பதோடு எல்லா இடங்களிலும் பிரகாசத்தையும் உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ளார். மனிதகுலத்திற்கு ஈடு இணையற்ற விளைவை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வான கும்பமேளாவிற்குத் தாம் மேற்கொண்ட பயணத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டார், "144 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்படும் ஒரு நிகழ்வில் நான் புனித நீராடினேன் என அவர் தெரிவித்தார்.
கும்பமேளாவில் உலகத் தரத்திலான ஏற்பாடுகள் தெளிவாக இருந்தன என்பதை அவர் மேலும் விவரித்தார். "இவ்வளவு சிறிய பகுதியில், இவ்வளவு பெரிய மனித கூட்டம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்ற கேள்வி இந்தியாவின் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் நமக்குள் அமைதியையும் எடுத்துக்காட்டுகிறது," என்று அவர் கூறினார். நிகழ்வின் போது ஏற்பட்ட ஒரு விபத்தை ஒப்புக்கொண்ட திரு. தன்கர், நிர்வாகத்தின் விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கையைப் பாராட்டினார்: கும்பமேளா மேலாண்மை, மின்சாரம், அணுசக்தி, சுகாதார வசதிகள், சட்டம் ஒழுங்கு ஏற்பாடுகள் மற்றும் உதவும் கரங்கள் கிடைப்பதைப் பாராட்டிய அவர், ஒரு இந்தியனாக, மதம், விழுமியங்கள், ஆன்மீகம் மற்றும் நமது நாகரிக நெறிமுறைகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட இவ்வளவு பெரிய மனிதக் கூட்டம் ஒன்று கூடி, சூழ்நிலைகளை அமைதியாகக் கையாண்டதில் நாம் ஒரு தேசமாக வளர்ந்துவிட்டோம் என்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்றார். இத்தகைய முன்மாதிரியான நிர்வாகத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தாம் வணக்கம் செலுத்துவதாக அவர் கூறினார்.
புதுதில்லியின் யஷோபூமியில் நடைபெற்ற உலகக் கணக்காளர்கள் மன்றத்தில் இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் கூடியிருந்தவர்களிடம் உரையாற்றிய துணைத் தலைவர், இந்திய மக்கள் இப்போது ஒரு லட்சிய மாதிரியில் நுழைந்துள்ளனர் என்று குறிப்பிட்டார். "கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவைப் போல எந்த நாடும் வளர்ச்சி அம்சத்தில் இவ்வளவு முன்னேறவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டது இந்த லட்சிய மாதிரி என்று அவர் கூறினார். மக்கள் வளர்ச்சியைக் காணும்போது, அவர்கள் இயல்பாகவே மேலும் வளர்ச்சி வேண்டும் என்று விரும்புகிறார்கள். மேலும் இது மனிதகுலத்தின் ஆறில் ஒரு பங்கை மிகவும் லட்சியம் கொண்ட மக்கள்தொகையாக மாற்றியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். "எனவே, இந்தக் குறைந்து வரும்,
அதே சமயம் கோரிக்கை வைக்கும் மக்கள்தொகை சொத்தாகும். ஆனால் இது ஒரு சவாலும் கூட. அது முரண்பட்டு பிடிவாதமாக இருந்தால், அது ஒரு திரி ஏற்றப்பட்ட வெடிகுண்டு ஆகும். மேலும் ஆற்றல் சரியாக திசைமாற்றப்பட்டால், அது அணுசக்தி ஆற்றலுக்குக் குறைவானதல்ல," என்றும் அவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்பப் பரவல் மற்றும் ஆழமான டிஜிட்டல் மயமாக்கலுடன் இந்தியா ஒரு இணையற்ற மற்றும் குறிப்பிடத்தக்கப் பொருளாதார எழுச்சியையும் பெற்றுள்ளது என்பதை அவர் மேலும் எடுத்துரைத்தார். பெரிய பொருளாதாரங்களில், அதன் வளர்ச்சி தனித்து நிற்கிறது. நம்பிக்கை மற்றும் சாத்தியக்கூறுகளின் சூழல் எங்கும் நிறைந்துள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.
தொழில்முறை அமைப்புகளின் பங்கு மீதான தமது நம்பிக்கையை வெளிப்படுத்திய திரு தங்கர், "உங்களைப் போன்ற அமைப்புகள் இளைஞர்களை அணுசக்தியாக மாற்றுவதுடன், அமைதியற்ற மனநிலையிலிருந்து விலக்கி வைக்கும் திறனைக் கொண்டுள்ளன என்று நான் உறுதியாக உணர்கிறேன்" என்றார்.
பட்டயக் கணக்காளர்களின் முக்கிய பங்கை அங்கீகரித்த திரு தங்கர், "பொருளாதார நிலைத்தன்மையின் கட்டமைப்பாளர்களாக நிதி ஒருமைப்பாட்டின் கண்காணிப்பாளர்களாக மற்றும் நிதித் துறையின் பாதுகாவலர்களாக நீங்கள் குறிப்பாக முன்னோடியில்லாத வளர்ச்சி மற்றும் செழிப்பை நோக்கிய நாட்டின் பயணத்திற்கு உகந்த முறையில் பங்களிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். சமகாலத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த செல்வாக்கு செலுத்துபவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் முக்கியத்துவம் பெறுகிறார்கள், ஆனால் ஒரு தொழில்முறை பிரிவினராக, பட்டயக் கணக்காளர்கள் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் மிகவும் சக்திவாய்ந்த செல்வாக்கு செலுத்துபவர்கள் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
"வணிக நெறிமுறைகள் மற்றும் வணிக மேம்பாட்டில் புரட்சிகரமான நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக பட்டயக் கணக்காளர்களைத் தவிர வேறு எந்தப் பிரிவினரும் இல்லை" என்று அவர் மேலும் கூறினார். "வணிகம், நிதி மற்றும் நிர்வாகத்தின் சந்திப்பில் உங்கள் தனித்துவமான நிலை, அடிமட்டத்திலிருந்து உயர்ந்த நிறுவன சாதனைகள் வரை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து ஊக்குவிக்க உங்களை அனுமதிக்கிறது. நமது பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் பெரிய மாற்றங்களுக்கான முக்கிய மையமாக நீங்கள் இருக்க முடியும்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
தமது உரையை நிறைவு செய்த குடியரசு துணைத் தலைவர், வளர்ந்த நாடு அந்தஸ்தை அடைவதன் சவால் மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "வளர்ந்த தேசமாக இருப்பதற்கான சவாலை உங்கள் மட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.
***
(Release ID: 2099020)
TS/PKV/RR/KR
(Release ID: 2099059)
Visitor Counter : 28