எரிசக்தி அமைச்சகம்
மின்சாரத் துறை முன்னேற்றத்திற்கு பட்ஜெட் வழி வகுக்கும்: அமைச்சர் திரு மனோகர் லால்
Posted On:
01 FEB 2025 6:10PM by PIB Chennai
மத்திய பட்ஜெட் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆறு துறைகளில் சீர்திருத்தங்கள் தொடங்கப்படுவதை நோக்கமாக கொண்டுள்ளதாக மத்திய மின்சாரத்துறை அமைச்சர் மனோகர்லால் கூறியுள்ளார். இது நாட்டின் மேம்பாட்டிற்கும், உலகளாவிய போட்டித்திறனையும் அதிகரிக்கவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரத் துறை குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டுவதை பட்ஜெட் குறிப்பிடுவதாகவும், சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சி பாதுகாப்பான, நிலையான, மற்றும் மலிவு விலை மின்சாரம் எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின் விநியோக நிறுவனங்களின் நிதி மற்றும் செயல்பாட்டு ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் அரசின் நடவடிக்கை, மாநிலங்களுக்கு இடையேயான மின் பரிமாற்ற திறனை மேம்படுத்துவதுடன், மின் துறையின் செயல்திறனை அதிகரிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லித்தியம்-அயன் பேட்டரி உள்பட 12 முக்கியமான தாதுக்களுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கும் அறிவிப்பும் வரவேற்கத்தக்கது என்றும், இது இந்தியாவில் பேட்டரிகள் உற்பத்திக்கும், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கவும் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மின்சார வாகனங்களுக்கான மின்கலன் உற்பத்திக்கான விலக்கு பட்டியலில் 35 கூடுதல் மூலதனப் பொருட்களைச் சேர்க்கவும் பட்ஜெட் முன்மொழிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098678
***
SV /GK /RJ/KR
(Release ID: 2098772)
Visitor Counter : 33