அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தும் தொலைநோக்கு அம்சங்களைக் கொண்டது மத்திய பட்ஜெட் – மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
Posted On:
01 FEB 2025 6:37PM by PIB Chennai
மத்திய பட்ஜெட் 2025-26, அரசின் சிறந்த செயல் திறனையும், பிரதமரின் எதிர்கால தொலைநோக்குப் பார்வையையும் பிரதிபலிக்கிறது என மத்திய அறிவியல், தொழில்நுட்பம், அணுசக்தித் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
பட்ஜெட் குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணுசக்தியில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தும் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்புக்கு அனுமதித்த பிரதமரின் அதே துணிச்சலான நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டுவதற்கான ஒரு உறுதியான முன்னேற்றமாக இந்த பட்ஜெட் உள்ளது என்று அமைச்சர் கூறினார். வரி விலக்குகள், வணிகம் செய்வதை எளிமைப்படுத்தும் அம்சங்கள் இதில் உள்ளதாகவும் இது மக்களை மையமாகக் கொண்ட பட்ஜெட் என்றும் இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
*****************
Release ID: 2098710
PLM/RR/KR
(Release ID: 2098752)
Visitor Counter : 30