ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல் ஜீவன் இயக்கம்: 15 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீரை உறுதி செய்தல்

Posted On: 01 FEB 2025 5:44PM by PIB Chennai

பிப்ரவரி 1, 2025 நிலவரப்படி, ஜல் ஜீவன் இயக்கம் 12.20 கோடி கூடுதல் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் மொத்த குடிநீர் குழாய் இணைப்பு 15.44 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு வந்துள்ளது. இது இந்தியாவின் அனைத்து கிராமப்புற வீடுகளில் 79.74% ஆகும். ஆகஸ்ட் 15, 2019 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இந்த சாதனை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. ஆரம்பத்தில், 3.23 கோடி (17%) கிராமப்புற வீடுகளில் மட்டுமே குழாய் இணைப்புகள் இருந்தன.

தொலை தூரத்திலிருந்து வீட்டிற்கு தண்ணீர் கொண்டு வருவது, கிராமப்புற தாய்மார்களின் அவல நிலையாக இருந்தது. இதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் 'வாழ்க்கையை எளிதாக்குவதை' நோக்கமாக கொண்டுள்ளது. கிராமப்புற குடும்பங்களுக்கு பெருமையையும் கண்ணியத்தையும் சேர்க்கிறது. ஜல் ஜீவன் இயக்கம் நிலைத்தன்மை நடவடிக்கைகளையும் கட்டாய கூறுகளாக செயல்படுத்துகிறது.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், கிராமப்புற வீடுகளுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்வதற்காக ஒரு வலுவான தர உறுதி மற்றும் கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. 2,162 ஆய்வகங்களின் வலையமைப்பு 66.32 லட்சம் நீர் மாதிரிகளை பரிசோதித்துள்ளது. அதே நேரத்தில் 24.80 லட்சம் பெண்கள் கள சோதனை கருவிகளை பயன்படுத்தி நீர் சோதனை செய்ய பயிற்சி பெற்றுள்ளனர். இது சமூக பங்களிப்பை வலுப்படுத்துகிறது. இதுவரை, 85.39 லட்சம் மாதிரிகள் மூலம் சோதிக்கப்பட்டுள்ளன, இது கிராமங்கள் முழுவதும் மாசுபாட்டை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் மேம்பட்ட நீர் தர கண்காணிப்பை உறுதி செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098651

***

PKV/RR/KR

 


(Release ID: 2098694) Visitor Counter : 21