சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல் - சிறுபான்மை சமூகங்களை அதிகாரப்படுத்துவதற்கான திட்டங்கள்
Posted On:
01 FEB 2025 2:53PM by PIB Chennai
இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கு சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகாரமளிப்பது அரசின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் பார்சிகள் என ஆறு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை குழுக்களுக்கு சமூக-பொருளாதார நிலைகளில் ஆதரவு வழங்க சிறுபான்மையினர் நல அமைச்சகம் பல திட்டங்களை செயல்படுத்துகிறது.
நாட்டின் மக்கள்தொகையில் 19.3 சதவீதம் பேர் சிறுபான்மையினர் ஆவார்கள். அரசின் முயற்சிகள் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதிலும், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் சிறுபான்மையினரைச் இணைப்பதை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகின்றன.
மெட்ரிக் கல்விக்குப் பிந்தைய உதவித்தொகை திட்டம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு உயர்கல்விக்கான சிறந்த வாய்ப்புகளை வழங்குவதற்கும், உயர்கல்வியில் அவர்களின் சாதனை விகிதத்தை அதிகரிப்பதற்கும் செயல்படுத்தப்படுகிறது.
மெட்ரிக் கல்விக்கு முந்தைய உதவித்தொகை திட்டம் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், பள்ளிக் கல்வியில் அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கவும் பயன் அளிக்கிறது.
தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதிக் கழகம் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையினரில் 'பின்தங்கிய பிரிவினரின்' சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக சுயதொழில் சலுகைக் கடன்களை வழங்குகிறது.
ஹஜ் புனிதப் பயணத்திற்காக குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கு புனித யாத்திரையை எளிதாக்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.
ஜியோ பார்சி திட்டம், பார்சி சமூகத்தின் மக்கள்தொகை வீழ்ச்சியைத் தடுப்பதற்கான ஒரு தனித்துவமான மத்திய துறை திட்டமாகும். இந்தத் திட்டம் 2013-14-ல் தொடங்கப்பட்டது.
நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 1300 பகுதிகளில் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம் (PMJVK) செயல்படுத்தப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் இடைவெளிகளைக் குறைக்கவும், சிறுபான்மை சமூகங்களின் நலனை மேம்படுத்தவும் முக்கியப் பங்காற்றுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098457
***************************
PLM/RR/KR
(Release ID: 2098457)
(Release ID: 2098670)
Visitor Counter : 13