நிதி அமைச்சகம்
இந்திய நிதி புலனாய்வு பிரிவு மெய்நிகர் டிஜிட்டல் சொத்து சேவை வழங்கும் நிறுவனமான பைபிட் ஃபின்டெக் நிறுவனத்திற்கு ரூ. 9 கோடியே 27 லட்சம் அபராதம் விதித்துள்ளது
प्रविष्टि तिथि:
31 JAN 2025 6:54PM by PIB Chennai
இந்திய நிதி புலனாய்வு பிரிவு, சட்ட விரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டம் 2002 (திருத்தப்பட்டபடி) பிரிவு 13(2)(d)-ன் கீழ் அதன் இயக்குநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மேம்படுத்தும் வகையில், மெய்நிகர் டிஜிட்டல் சொத்து சேவை வழங்கும் நிறுவனமான பைபிட் ஃபின்டெக் நிறுவனத்திற்கு மொத்தம் ரூ.9,27,00,000 (ஒன்பது கோடி இருபத்தேழு லட்சம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. சட்ட விரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் (பதிவுகளைப் பராமரித்தல்) விதிகள், 2005-ன் கீழ் அதன் கடமைகளை மீறியது மற்றும் அதன் இயக்குநர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்டதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மெய்நிகர் டிஜிட்டல் சொத்து சேவை வழங்கும் பைபிட் பின்டெக் நிறுவனம் மீது சட்ட விரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. நிதி புலனாய்வுப் பிரிவின் கட்டாயப் பதிவை பெறாமல் இந்த நிறுவனம் இந்திய சந்தையில் தனது சேவைகளை விரிவுபடுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098153
***
PKV/SV/RR/DL
(रिलीज़ आईडी: 2098308)
आगंतुक पटल : 97