பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிர்வாக சீர்திருத்தங்கள் துறை அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டில், இந்திய நிர்வாக பணியாளர் கல்லூரியுடன் இணைந்து செயல்படுகிறது
Posted On:
31 JAN 2025 2:45PM by PIB Chennai
குறைதீர்க்கும் அதிகாரிகளுக்கான பயிற்சி தேவைகள் மதிப்பீடு, உள்ளடக்கம் போன்றவற்றில் பொது குறை தீர்க்கும் துறை திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான பாடத்திட்ட மேம்பாட்டிற்காக இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து செயல்படுகிறது. 22 மாநில/யூனியன் பிரதேச நிர்வாகப் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பாடுகள் மேற்கொள்ள்ப்படுகின்றன.
குறைதீர்க்கும் முறைகளை மக்களுக்கு திறன் வாய்ந்ததாகவும், அணுகக்கூடியதாகவும், மாற்றுவதற்காக 26.12.2024 அன்று நடைபெற்ற பிரகதி கூட்டத்தில் பிரதமரின் அறிவுறுத்தல்களின்படி இந்த ஒத்துழைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிர்வாக சீர்திருத்தங்கள் துறை அதன் செவ்வோட்டம் (Sevottam) திட்டத்தின் மூலம் மாநில அரசுகளில் உள்ள குறை தீர்க்கும் அதிகாரிகளுக்கு CPGRAMS இணையதளத்தில் பயிற்சி அளிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் மாநிலங்களில் உள்ள குறை தீர்க்கும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதில் மாநில நிர்வாக பயிற்சி நிறுவனங்கள் கூட்டு நிறுவனங்களாக உள்ளன. ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, அசாம், ராஜஸ்தான், ஜார்கண்ட், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், கேரளா, திரிபுரா, ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பிரதேசம், கோவா, குஜராத், உத்தரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், தில்லி, மேகாலயா, மிசோரம், மணிப்பூர், ஒடிசா ஆகிய 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் நிர்வாக சீர்திருத்தங்கள் துறையிலிருந்து நிதியைப் பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097937
***
PLM/RJ/DL
(Release ID: 2098302)
Visitor Counter : 31