நித்தி ஆயோக்
சுழற்சி பொருளாதாரம் குறித்த ஒருநாள் தேசிய கருத்தரங்கை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நித்தி ஆயோக் நடத்தியது
Posted On:
31 JAN 2025 2:29PM by PIB Chennai
சுழற்சி பொருளாதாரம் குறித்த ஒருநாள் தேசிய கருத்தரங்கை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இன்று (31.01.2025) நித்தி ஆயோக் நடத்தியது. பழைய வாகனங்களை அழித்தல், பழைய டயர்களை அழித்தல் என்ற இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் உற்பத்தியாளர்கள், மறுசுழற்சி செய்வோர் மத்திய அரசு அதிகாரிகள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் உட்பட 150-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கருத்தரங்கை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு நரேஷ்பால் கங்வார் தொடங்கிவைத்தார். 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதில் சுழற்சிப் பொருளாதாரம் எவ்வாறு உதவுகிறது என்பது பற்றி அவர் எடுத்துரைத்தார்.
பயன்பாட்டாளர்களிடையே விழிப்புணர்வு குறைபாடு செயல்பாடு மற்றும் கட்டமைப்பு சவால்கள், சுற்றுச்சூழலில் கரியமில வாயு பிரச்சனையை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட விஷயங்கள் இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097925
***
SMB/AG/DL
(Release ID: 2098251)
Visitor Counter : 9