பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நல்லாட்சிக்கான இரண்டு நாள் தேசிய மாநாடு காந்தி நகரில் நிறைவடைந்தது

प्रविष्टि तिथि: 31 JAN 2025 7:55PM by PIB Chennai

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற நல்லாட்சிக்கான தேசிய மாநாடு இன்று (31.01.2025) நிறைவடைந்தது. தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம், செயல்முறைகளின் மறுசீரமைப்பு, சிறந்த பொது சேவை வழங்கல் ஆகியவை தொடர்பான மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்தும் வகையில், இந்த மாநாட்டில் விவாதங்கள் நடைபெற்றன. நாடு முழுவதிலுமிருந்து மூத்த அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், நிர்வாக வல்லுநர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். முக்கிய புதுமை திட்டங்களும், வெற்றிகரமான நிர்வாக நடைமுறைகளும் இந்த மாநாட்டில் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகள் துறையின்  செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ், தொழில்நுட்பம் மூலம் பொது சேவை வழங்கலை மேம்படுத்துவதில் குஜராத் அரசு மேற்கொண்ட முன்மாதிரியான முயற்சிகளைப் பாராட்டினார். ஒருங்கிணைந்த சேவை இணையதளம் மூலம் மக்களுக்கும், அரசுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் சிறந்த முன்மாதிரியாக குஜராத் திகழ்கிறது என்று அவர் எடுத்துரைத்தார்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, திறன் வாய்ந்த நிர்வாகம், தொழில்நுட்பத்துடன் கூடிய ஆளுகை நடைமுறைகள் போன்றவை குறித்தும் இவற்றில் மத்திய-மாநில அரசுகளின் ஒத்துழைப்பு குறித்தும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098205

***

TS/PLM/RJ/DL  


(रिलीज़ आईडी: 2098240) आगंतुक पटल : 41
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी