சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நெடுஞ்சாலைகள், நமது தேசிய சொத்துக்கள், அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம்: திரு நிதின் கட்கரி

Posted On: 31 JAN 2025 7:40AM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்  அமைச்சர் திரு நிதின் கட்கரி, “தேசிய நெடுஞ்சாலைகள், நமது தேசிய சொத்துகள், அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம். கட்டுமானத்தின் தரத்தை உயர்த்துவதற்கும்நமது அமைப்பில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், ஒப்பந்ததாரர்களின் பொறுப்பை சரிசெய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்”, என்று கூறியுள்ளார்.

 

புது தில்லியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பங்குதாரர்களின் ஆலோசனைப்   பயிலரங்கில் உரையாற்றிய திரு கட்கரி, “தொழில்நுட்பம் ஒரு சிறந்த இயக்கு சக்தியாக இருப்பதுடன், தானியங்கி மற்றும் நுண்ணறிவு இயந்திர உதவியுடனான கட்டுமானத்தை ஏற்றுக்கொள்வது, சரியான திசையில் பயணிக்கும் ஒரு  முயற்சியாகும். லக்னோ-கான்பூர்  விரைவுச் சாலை  சோதனை திட்டத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம், விரைவில் இந்த தொழில்நுட்பத்தை மற்ற திட்டங்களுக்கும் செயல்படுத்துவோம்”, என்று தெரிவித்தார்.

 

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை இணையமைச்சர் திரு அஜய் தம்தா கூறுகையில், “உலகத் தரம் வாய்ந்த சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது, இது நமது உள்கட்டமைப்பைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தில் ஒவ்வொரு பங்குதாரரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நாம் முன்னேறும்போதுஉணரிகள், செயற்கைக்கோள்கள் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கு  அவசியம். தொடர்ச்சியான தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பை 2047  தொலைநோக்குப் பார்வையுடன் சீரமைக்கவும், நமது தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்"என்று குறிப்பிட்டார்.

 

 

'தானியங்கி மற்றும் நுண்ணறிவு இயந்திர உதவியுடன் கட்டுமானம்' தொழில்நுட்பத்தை இணைப்பதன் மூலம் தேசிய நெடுஞ்சாலையின் கட்டுமான வலிமையை மேம்படுத்துவதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தப் பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்  அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட 'தேசிய நெடுஞ்சாலை திட்டங்களில் தானியங்கி மற்றும் நுண்ணறிவு இயந்திர உதவியுடன் கட்டுமானத்தை ஏற்றுக்கொள்வது' குறித்த வரைவுக் கொள்கையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097794

TS/BR/KR

 

(Release ID: 2097794)

 

 

***

 

 


(Release ID: 2097872) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi