பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'குஜராத் ஆளுகை மாதிரி' மற்ற பகுதிகளிலும் பின்பற்றப்பட வேண்டிய பல சிறந்த நடைமுறைகளை செயல்படுத்துகிறது: டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 30 JAN 2025 4:56PM by PIB Chennai

“குஜராத் ஆளுகை மாதிரி" சிறந்த பல நடைமுறைகளை செயல்படுத்துகிறது. இது மற்ற பகுதிகளிலும் வெற்றிகரமாக அப்படியே செயல்படுத்தப்பட லாம் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மத்திய அரசு அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ள பல ஆளுகை சார்ந்த புதுமைகள் பிரதமர்  திரு நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டவைதான் என்று அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

கடந்த பத்தாண்டுகளில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பாராட்டினார். "இந்த மாற்றம் ஒரே இரவில் நடந்துவிடவில்லை. தேசிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட பல சீர்திருத்தங்கள் முதலில் குஜராத்தில் சோதிக்கப்பட்டு முழுமைப்படுத்தப்பட்டன என்றும், தற்போது அவை நாடு முழுவதும் செயலாக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் கீழ் நிர்வாகக் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097631  

-----

TS/IR/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2097675) வருகையாளர் எண்ணிக்கை : 61
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Gujarati