நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய மறைமுக மற்றும் சுங்க வரிகள் வாரியம் 2025 ஜனவரி 11 முதல் 26 வரை பறிமுதல் செய்யப்பட்ட 10,413 கிலோ போதைப்பொருட்களை அழித்தது

Posted On: 29 JAN 2025 6:53PM by PIB Chennai

நிதி அமைச்சகத்தின் மத்திய மறைமுக  மற்றும்  சுங்கவரிகள் வாரியத்தின் போதைப்பொருள் அகற்றல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 2025 ஜனவரி 11 முதல் 26 வரை, சுமார் 7,844 கிலோ கஞ்சா, 1,724 கிலோ மெத்தகுலோன் (மாண்ட்ராக்ஸ்), 560 கிலோ கஞ்சா / சரஸ், 130 கிலோ மெத்தாம்பேட்டமைன், 105 கிலோ கெட்டமைன், 23 கிலோ ஹெராயின், 20 கிலோ கோகைன், 7 கிலோ எம்.டி.எம்.ஏ, 94.16 லட்சம் டிராமடோல் எச்.சி.எல் மாத்திரைகள், 46,000 அல்ப்பிரசோலம் மாத்திரைகள் மற்றும் 586 ஊசி ஆம்பல்கள்  அழிக்கப்பட்டன.

அழிக்கப்பட்ட போதைப் பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.2246 கோடி ஆகும்.  நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பான மற்றும் அபாயமற்ற முறையில் இந்த போதை பொருட்கள் அழிக்கப்பட்டது.

***

IR/AG/DL


(Release ID: 2097443) Visitor Counter : 25