ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் கைத்தறி மாநாட்டை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 29 JAN 2025 11:30AM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் கைத்தறி மாநாட்டை மத்திய ஜவுளி அமைச்சர் திரு கிரிராஜ் சிங் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 2030-ம் ஆண்டுக்குள்  மின்னணு வர்த்தக சந்தை இலக்கு 325 பில்லியன் டாலர்  அளவிற்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். கைத்தறி பொருட்களின் நீடித்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை, இயற்கை சாயங்களின் நன்மைகள், கரிம இழைகள் மற்றும் கைத்தறி பொருட்களின் வடிவமைப்புகளின் தனித்துவம் குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

கைத்தறி நெசவாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் நியாயமான ஊதியத்தை உறுதி செய்யும் வகையில் நீடித்த வாழ்வாதாரத்தை வழங்குவதற்கான ஒரு மாதிரியை உருவாக்குமாறு அமைப்பு சார்ந்த, பெருநிறுவன துறையில் ஈடுபட்டு உள்ள ஜவுளித் தொழிலதிபர்களை மத்திய  அமைச்சர் வலியுறுத்தினார். பெருநிறுவனங்கள், உற்பத்தியாளர் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கு ஜவுளி அமைச்சகத்தால் ஒரு விருது வழங்கப்படவுள்ளது. இது கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 300 நாட்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை வழங்கும்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய வெளியுறவு மற்றும் ஜவுளி இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா, கைத்தறி பொருட்கள் நமது நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தின் சான்றாகத் திகழ்கின்றன என்று குறிப்பிட்டார். இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் நியாயமான வருவாயை வழங்கும் ஒரு துடிப்பான துறையாக கைத்தறித் தொழிலுக்கு புத்துயிர் அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

***

(Release ID: 2097218)

TS/IR/AG/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2097267) வருகையாளர் எண்ணிக்கை : 68
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati