மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
பன்மொழி நிர்வாகத்திற்காக பாஷினியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் வடகிழக்கு மாநிலமாக திரிபுரா திகழ்கிறது
प्रविष्टि तिथि:
28 JAN 2025 4:12PM by PIB Chennai
திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் மாணிக் சஹாவின் வழிகாட்டுதலின் கீழ், அம்மாநில அரசு மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மின்னணு இந்தியா பாஷினி பிரிவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது திரிபுராவின் வளமான பிராந்திய மொழிகளின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான மாநிலத்தின் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. அத்துடன் இந்த மொழிகளை நிர்வாகத்தில் பயன்படுத்துவதன் மூலம் மக்களின் மின்னணு முறையிலான பங்கேற்பை எளிதாக்குகிறது.
இதற்கான நிகழ்ச்சி அகர்தலாவில் உள்ள பிரக்னா பவனில் நடைபெற்றது. 22 இந்திய மொழிகளில் அனைத்து மக்களுக்கும் தடையற்ற தகவல் தொடர்பு மற்றும் இணைய அணுகலை உறுதி செய்வதற்காக மின்னணு இந்தியா திட்டத்தின் கீழ், பாஷினி ஒரு புரட்சிகர முயற்சியாக உள்ளது. குரல் வழிமுறை மூலம், மின்னணு மற்றும் எழுத்தறிவு வேறுபாடுகளை இணைப்பதை பாஷினி நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2096998
***
TS/IR/RS/RR/DL
(रिलीज़ आईडी: 2097062)
आगंतुक पटल : 71