உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
பிரயாக்ராஜ் விமான நிலையம் மஹா கும்பமேளாவின் நுழைவாயிலாக புதிய தர அளவீடுகளை ஏற்படுத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
27 JAN 2025 6:38PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு ஆகியோரின் தலைமையின் கீழ், பிரயாக்ராஜ் விமான நிலையமானது பக்தி, கலாச்சாரம் மற்றும் பிரம்மாண்டமான மகா கும்பமேளா திருவிழா நகரத்தின் நவீன நுழைவுவாயிலாக மாறியுள்ளது. 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை பக்தர்களின் வருகையை எதிர்கொள்வதற்காக பெரிய விரிவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் திறமையான செயல்பாடுகளும், துல்லியமான திட்டமிடலும் காணப்பட்டன. 2024 டிசம்பர் 8, அன்று அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, முனைய விரிவாக்கம், கட்டுமான முன்னேற்றம், பயணிகளின் வசதிகள் மற்றும் காலக்கெடுவுக்கான உத்தரவுகளை வழங்குவது குறித்து ஆய்வு செய்தார். 2025 ஜனவரி 9 அன்று, இணை அமைச்சர் திரு முரளிதர் மோஹோல், பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.
புனித பயணத்தை எளிதாக்க, 2025 ஜனவரி மாதத்தில் 81 கூடுதல் புதிய விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, இந்தியா முழுவதும் இருந்து பிரயாக்ராஜுக்கு மாதந்தோறும் சுமார் 80000 இருக்கைகளுடன் 132 விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, பிரயாக்ராஜ் இந்தியா முழுவதும் 17 நகரங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. 2024 டிசம்பர் மாதத்தில் 8 நகரங்களுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டன. ஸ்ரீநகர், விசாகப்பட்டினம் உட்பட 26 நகரங்களுக்கு நேரடி மற்றும் இணைப்பு விமானங்களுடன் பிரயாக்ராஜ் இப்போது பக்தர்களுக்கு நன்கு இணைக்கப்பட்ட மையமாக மாறியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2096769
***
TS/IR/RS/RR
(रिलीज़ आईडी: 2096986)
आगंतुक पटल : 84