இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பாராட்டு
प्रविष्टि तिथि:
24 JAN 2025 3:58PM by PIB Chennai
இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியை மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று (24.01.2025) கௌரவித்தார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வென்ற இந்திய அணி, சிறந்த திறன்களை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதில் அரசின் உறுதிப்பாட்டை திரு மாண்டவியா எடுத்துரைத்தார். அனைவரையும் உள்ளடக்கிய விளையாட்டு பங்கேற்பு என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அமைச்சர் சுட்டிக்காட்டினார். 'மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்கும் அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
***
TS/PLM/AG/DL
(रिलीज़ आईडी: 2095929)
आगंतुक पटल : 74