உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.651 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 23 JAN 2025 9:00PM by PIB Chennai

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சியில் ரூ. 651 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர், திரு அமித் ஷா தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இப்பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டங்கள் 2029-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று உறுதியளித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பிரதமரின் சூரியசக்தி மேற்கூரை திட்டத்தில் இணையுமாறு குடியிருப்பாளர்களை அவர் ஊக்குவித்தார். இது மின்சாரத்தை சேமிக்கவும் செலவுகளைக் குறைக்கவும் உதவும் என்று அவர் கூறினார்.

அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு சத்தான உணவை உறுதி செய்வதற்கான அரசின் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். இந்தப் பிராந்தியத்தில் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை அவர் பாராட்டினார். பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்குமாறு மக்களை அவர் கேட்டுகொண்டார். 

***

(Release ID: 2095622)

TS/PLM/AG/KR

 


(रिलीज़ आईडी: 2095793) आगंतुक पटल : 47
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati