சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் கோயம்புத்தூரில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம்

Posted On: 23 JAN 2025 5:45PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் கோயம்புத்தூரில் இன்று அத்துறையின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாற்றுக் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தை (கேம்பா- CAMPA) செயல்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

வனப்பரப்பை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்கவும் கேம்பா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை குழு உறுப்பினர்கள் பாராட்டினர். கேம்பா திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் அவர்கள் வழங்கினர். 2022-ம் ஆண்டுக்கும் 2024-ம் ஆண்டுக்கும் இடையில் மாற்றுக் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையமான கேம்பா (CAMPA) மேற்கொண்ட பணிகளை விளக்கும் வகையில் கேம்பா 2022-24 ‘வெற்றிக்கதைகள் ஒரு பார்வை’ ('Glimpses: Success Stories of CAMPA 2022-24') என்ற புத்தகமும் இந்த கூட்டத்தின் போது வெளியிடப்பட்டது.

கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல், மர இனப்பெருக்க நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிப் பணிகளை இக்குழு ஆய்வு செய்தது. நிறுவனத்தின் இயக்குநர் தற்போது நடைபெற்று வரும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' நடும் இயக்கத்தின் கீழ் உள்ளூர் மர இனங்களை நடும் நிகழ்ச்சியிலும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

***

AD/PLM/AG/DL


(Release ID: 2095562) Visitor Counter : 52


Read this release in: English , Urdu , Hindi