சுரங்கங்கள் அமைச்சகம்
கோனார்க் சூரியக் கோவிலில் நடைபெற்ற டிஎம்எப் கண்காட்சியை மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி பார்வையிட்டார்
Posted On:
21 JAN 2025 6:45PM by PIB Chennai
கோனார்க்கில் உள்ள புகழ்பெற்ற சூரியக் கோயிலில் நடைபெற்ற மாவட்ட கனிம அறக்கட்டளை கண்காட்சியை மத்திய சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி பார்வையிட்டார். ஒடிசா அரசுடன் இணைந்து சுரங்க அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சி ஜனவரி 18-ல் தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. தமது பயணத்தின் போது, அமைச்சர் பல்வேறு சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட புதுமையான தயாரிப்புகளை அவர் பார்வையிட்டார்.
கண்காட்சியின் கருப்பொருள், "நிலையான வளர்ச்சியின் மூலம் சமூகங்களை மேம்படுத்துதல்" என்பதாகும். டிஎம்எப் ஆதரவுடனான சுய உதவிக் குழுக்கள், இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், இந்துஸ்தான் காப்பர் நிறுவனம், நால்கோ, வேதாந்தா, ஒடிசா அரசு ஆகியவற்றின் பணிகளைக் காட்சிப்படுத்தும் 18 அரங்குகள் இடம் பெற்றிருந்தன. சுய உதவிக் குழுக்களால் கைவினைப் பொருட்கள், கையால் நெய்யப்பட்ட ஆடைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.
இந்தக் கண்காட்சி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. பங்கேற்ற அனைத்து சுய உதவிக் குழுக்களும் கூட்டாக ரூ 9 லட்சத்திற்கும் அதிகமாக வருவாய் ஈட்டின. நிதி அதிகாரமளித்தலை வளர்ப்பதில் இந்த முயற்சிகளின் தாக்கத்தை இதுமேலும் வலியுறுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2094889
***
TS/PKV/AG/DL
(Release ID: 2094925)
Visitor Counter : 27