பாதுகாப்பு அமைச்சகம்
குடியரசு தின கொண்டாட்டங்கள் 2025: தேசிய பள்ளி இசைக்குழு இறுதிப்போட்டி புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது
Posted On:
21 JAN 2025 4:32PM by PIB Chennai
குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய பள்ளி இசைக்குழு போட்டி 2024-25 -இன் இறுதிப்போட்டி 2025 ஜனவரி 24 & 25 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெறும். ஜனவரி 25-ம் தேதி பரிசளிப்பு விழாவில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் கலந்து கொள்வார்.
ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து (கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலம்) நான்கு அணிகள் வீதம் மொத்தம் 16 இசைக்குழு அணிகள் பங்கேற்கின்றன. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள குழந்தைகளிடையே தேசபக்தி மற்றும் ஒற்றுமை உணர்வை புத்துயிர் பெறச் செய்யவும், முழுமையான கல்விக்கான பாதையில் அவர்கள் பயணிப்பதை ஊக்குவிக்கவும் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு( முதல் இடம் - ரூ.21,000/-, 2-வது இடம் - ரூ.16,000/-, 3-வது இடம்- ரூ.11,000), ஒரு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் மீதமுள்ள அணிக்கு தலா ரூ.3,000/- ஆறுதல் ரொக்கப் பரிசு வழங்கப்படும். பாதுகாப்பு படைகளின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சகத்தால் நியமிக்கப்படும் நடுவர் குழுவால் மாணவர்களின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2094834
***
TS/PKV/AG/DL
(Release ID: 2094890)
Visitor Counter : 29