விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
20 JAN 2025 6:35PM by PIB Chennai
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் வேளாண் பிரச்சினைகள் குறித்து வேளாண் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். ரபி பருவ விதைப்பு முன்னேற்றம், வானிலை நிலைமைகள், தேசிய பூச்சி கண்காணிப்பு அமைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் பூச்சி கண்காணிப்பு நடவடிக்கைகள் ,விளைபொருட்களின் இறக்குமதி, ஏற்றுமதி உள்ளிட்ட வேளாண் பொருட்களின் சந்தைப்படுத்தல் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
வேளாண் பிரச்சனைகள் குறித்து வாராந்திர கூட்டங்களை நடத்துவதோடு இனி கூடுதலாக வேளாண் அமைச்சர்கள் நிலையில் மாநில அரசுகளுடன் அடிக்கடி கூட்டங்களை நடத்துவேன் என்று மத்திய அமைச்சர் கூறினார். கீழ்மட்ட அளவில் பிரச்சனைகளை தீர்க்க மாநில அரசுகளின் அதிகாரிகளின் ஈடுபாடு தேவை என்பதால், அதிகாரிகள் இந்தப் பிரச்சனைகளில் மாநில அரசுகளுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2094583
-------
TS/IR/AG/DL
(रिलीज़ आईडी: 2094615)
आगंतुक पटल : 72