சுரங்கங்கள் அமைச்சகம்
சுரங்க அமைச்சகம் டிஎம்எப் கண்காட்சியை கோனார்க் சூரிய கோவிலில் திறந்துள்ளது
प्रविष्टि तिथि:
18 JAN 2025 6:21PM by PIB Chennai
சுரங்க அமைச்சகம், ஒடிசா அரசாங்கத்துடன் இணைந்து, மாவட்ட கனிம அறக்கட்டளை டிஎம்எப் கண்காட்சியை கோனார்க்கில் உள்ள சூரிய கோவிலில் அமைத்துள்ளது. 2025 ஜனவரி 18 முதல் 21 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, நிலையான வளர்ச்சியின் மூலம் சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. சுரங்க அமைச்சகம், நால்கோ மற்றும் ஓஎம்சி அதிகாரிகள் முன்னிலையில், சுரங்க அமைச்சகத்தின் இணைச் செயலர் திருமதி ஃபரிதா எம்.நாயக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
"நிலையான வளர்ச்சியின் மூலம் சமூகங்களை மேம்படுத்துதல்" என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த கண்காட்சியில், டிஎம்எப்-ஆதரவு சுயஉதவி குழுக்கள் , இந்திய புவியியல் ஆய்வு , இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் , நால்கோ ஆகியவற்றின் பணிகளை வெளிப்படுத்தும் 18 துடிப்பான அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த அரங்குகள் , உள்ளூர் கைவினைப்பொருட்கள், புதுமையான வாழ்வாதாரத் திட்டங்கள் மற்றும் சமூகம் சார்ந்த முன்முயற்சிகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துகின்றன, சமூகங்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதிலும், நிலையான நடைமுறைகள் மூலம் தன்னம்பிக்கையை வளர்ப்பதிலும் டிஎம்எப் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதில் அமைச்சகத்தின் வலுவான உறுதிப்பாட்டை திருமதி நாயக் எடுத்துரைத்தார். டிஎம்எப்-ன் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை இயக்குவதில் தீவிரமாக பங்கேற்ற ஒடிசா அரசு, பெருநிறுவன பங்குதாரர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பங்களிப்புகளை அவர் பாராட்டினார்.
வரலாற்று மகத்துவம் கொண்ட சூரியன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி, நவீன நிலையான வளர்ச்சியைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், இப்பகுதியின் வளமான கலாச்சார பாரம்பரியத்துடன் இணைக்கிறது. இக்கண்காட்சி உள்ளூர் சமூகங்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்கேற்பை ஈர்த்துள்ளது, சுய உதவிக் குழுக்களுக்கு அவர்களின் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் எதிர்கால ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு மாறும் தளத்தை வழங்குகிறது.
நிலையான நடைமுறைகளைச் செயல்படுத்துதல், முழுமையான சமூக வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் நீண்டகால நேர்மறையான மாற்றத்தை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவதற்கு சுரங்க அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்தக் கண்காட்சி முன்னெடுக்கிறது.
***
PKV/KV
(रिलीज़ आईडी: 2094109)
आगंतुक पटल : 62