சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஹெச்ஐவி-க்கு எதிரான ஓட்டம்: மத்திய இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்
Posted On:
18 JAN 2025 4:53PM by PIB Chennai
18.01.2025 சனிக்கிழமை அன்று பனாஜியின் மிராமரில் கோவா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துடன் (ஜி.எஸ்.ஏ.சி.எஸ்) இணைந்து தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (என்ஏசிஓ) ஏற்பாடு செய்த தேசிய ரெட் ரன் 2.0 என்ற ஓட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 150 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றனர்.
மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் நாயக், 10 கிலோ மீட்டர் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஆண், பெண், திருநங்கை என பிரிவுகளில் போட்டி நடந்தது. சமூக ஈடுபாடு மூலம் ஹெச்ஐவி தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இது ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆண்கள் பிரிவில் கேரளாவைச் சேர்ந்த திரு நபீல் சாஹி முதல் பரிசையும், பெண்கள் பிரிவில் சண்டிகரைச் சேர்ந்த ஸ்ரேயா முதல் பரிசையும், திருநங்கைகள் பிரிவில், மணிப்பூரைச் சேர்ந்த தனு சோக்சோம் முதல் பரிசையும் வென்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு முறையே ரூ.50,000, ரூ.35,000, ரூ.25,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் பேசிய இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், எய்ட்ஸ் என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சினை அல்ல எனவும் இது பொதுவாக சமூகத்தை பாதிக்கிறது என்றும் மருத்துவ ஆராய்ச்சித் துறையில் ஏற்பட்டுள்ள அனைத்து முன்னேற்றங்களுடனும் அதை தடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
***
PLM/KV
(Release ID: 2094049)
Visitor Counter : 34