புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நேபாளத்தில் 900 மெகாவாட் மேல் கர்னாலி நீர்மின் உற்பத்தித் திட்டத்திற்கான் ஒப்பந்தம்

Posted On: 17 JAN 2025 10:48AM by PIB Chennai

நேபாளத்தில் 900 மெகாவாட் மேல் கர்னாலி நீர்மின் உற்பத்தித் திட்டத்திற்காக இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, எஸ்ஜெவிஎன் நிறுவனம், ஜிஎம்ஆர்  எனர்ஜி நிறுவனம், நேபாள மின்சார ஆணையம் ஆகியவை இணைந்த கூட்டு  ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த   முன்முயற்சி அப்பிராந்தியத்தில் மின் சக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மேம்பாட்டு நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

திட்ட மேம்பாடு, கட்டுமானம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றுக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவது இந்த ஒப்பந்தத்தின் அம்சமாகும்.  மின் உற்பத்தி திட்டத்தின் செயலாக்கம், பகிர்மானம்  போன்ற முன்மாதிரியின் அடிப்படையில் அதற்கான வர்த்தக செயல்பாடு தொடங்கிய தேதியிலிருந்து  25 ஆண்டுகாலத்திற்கு இத்திட்டம் செயல்பட இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

இந்திய புதுபிக்கத்தக்க எரிசக்தி கூட்டமைப்பு, எஸ்ஜேவிஎன் நிறுவனம், ஜிஎம்ஆர் எனர்ஜி நிறுவனம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இன்று புதுதில்லியில் இறுதி செய்யப்பட்டது.

 

நிகழ்ச்சியில் பேசிய ஐஆர்இடிஏ தலைமை  இயக்குநர் திரு பிரதீப் குமார் தாஸ், "இந்தப் பிராந்தியத்தில் நீடித்த எரிசக்தி மேம்பாடு என்ற பொதுவான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இந்த ஒப்பந்தம் ஒரு குறிப்பிடத்தக்க அங்கம் வகிப்பதாக கூறினார். நீர்மின் சக்தியின் விரிவான  திறனை மேம்படுத்துவதன் மூலம், மேல் கர்னாலி திட்டம் எல்லைக கடந்து  இருநாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பிற்கு முன்மாதிரியாக செயல்படும். பொருளாதாரம், சுற்றுச்சூழலுக்கான  மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு இந்த ஒப்பந்தம் வகை செய்வதாகவும் அவர் கூறினார்.

**

TS/SV/KPG/KV/DL


(Release ID: 2093888) Visitor Counter : 15


Read this release in: English , Gujarati , Urdu , Hindi