சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரில் உள்ள தேசிய மனநல மறுவாழ்வு நிறுவனத்தில் புதிய கட்டடங்களை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் நாளை திறந்து வைக்கிறார்
Posted On:
16 JAN 2025 5:07PM by PIB Chennai
மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரில் தேசிய மனநல மறுவாழ்வு நிறுவன வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நிர்வாகம், கல்வி மற்றும் விடுதிக் கட்டடங்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் நாளை திறந்து வைக்கிறார். மத்தியப் பிரதேச அமைச்சர்கள் திரு கரண் சிங் வர்மா (வருவாய்), திரு நாராயண் சிங் குஷ்வாஹா (சமூக நீதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல்), திரு அலோக் சர்மா, நாடாளுமன்ற உறுப்பினர் (போபால்), திரு சுதேஷ் ராய், சட்டமன்ற உறுப்பினர் (செகூர்) ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய மனநல மறுவாழ்வு நிறுவன வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சேவைகள், நிர்வாகம், கல்வியாளர்கள் விடுதி மற்றும் ஸ்டுடியோ அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் சேவைப் பிரிவில் நரம்பியல் சிகிச்சை, இயன்முறை மருத்துவம், பேச்சுப் பயிற்சி, தொழில்முறை நோய் சிகிச்சை, எம்.ஆர்.ஐ., சி.டி ஸ்கேன், ரேடியாலஜி, எக்ஸ்ரே அறைகள், தினப்பராமரிப்பு சேவைகள் போன்றவை வழங்கப்படுகின்றன. சேவைத் தொகுப்பில் மருத்துவர்கள், மருத்துவ கண்காணிப்பாளர், பதிவு மற்றும் உதவி மையம், மருத்துவ ஊழியர்களுக்கான அறைகள், சரக்கு அறை, சமையலறை, உணவுவிடுதிகள் போன்றவற்றிற்கு சுமார் 70 அறைகள் உள்ளன. நிறுவனத்தின் ஸ்டுடியோ அடுக்ககம் 23 இரட்டை படுக்கை அறை, ஒரு சரக்கு அறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் கல்வித் தொகுப்பு சுமார் 60 அறைகளைக் கொண்டுள்ளது. இதில் 16 வகுப்பறைகள், ஒரு நூலகம், பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கான அறைகள் உள்ளன. தரை தளத்தில் உள்ள அதன் பல்நோக்கு கூடத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தொடக்க நிலை சிகிச்சை மையம் உள்ளது. இந்நிறுவனத்தின் மாணவர்களுக்கு 62 இரட்டை படுக்கை மற்றும் 51 ஒற்றை படுக்கை அறைகள், மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு, 02 இரட்டை படுக்கை மற்றும் 02 ஒற்றை படுக்கை அறைகள் ஒதுக்கப்பட்ட விடுதி வசதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2093432
***
TS/SMB/AG/DL
(Release ID: 2093523)
Visitor Counter : 17