சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மண்டல மையத்தின் (சி.ஆர்.சி) நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா - மத்திய அமைச்சர் திரு வீரேந்திர குமார் நாளை பங்கேற்கிறார்

Posted On: 14 JAN 2025 6:14PM by PIB Chennai

மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் ஜெய்ப்பூரில் மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாடு, மறுவாழ்வு அதிகாரமளித்தலுக்கான ஒருங்கிணைந்த மண்டல மையத்தின் (சிஆர்சி) நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் அதன் தற்காலிக வளாகத்தின் திறப்பு விழாவும் நாளை (2025 ஜனவரி 15) நடைபெறுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் அன்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு அவினாஷ் கெலாட், திரு ராஜேஷ் அகர்வால், மத்திய மாற்றுத் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.

ஜெய்ப்பூரில் இந்த மையம் அமைக்கப்படுவதன் மூலம், ராஜஸ்தானில் தொலைதூர மாவட்டப் பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், இதர பயனாளிகளின் மறுவாழ்வு தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

2000-ம் ஆண்டு முதல், மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகளை ஒரே குடையின் கீழ் வழங்குவதற்காக பல்வேறு மாநிலங்களில் சிஆர்சி-க்கள் எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மண்டல மையங்கள் நிறுவப்படுகின்றன.

ஒருங்கிணைந்த மையங்களின் முக்கிய நோக்கங்கள்:

*அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மறுவாழ்வு சேவைகளை வழங்குதல்.

*மறுவாழ்வு நிபுணர்கள், பணியாளர்கள், உதவி ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல்.

மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி, திறன் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துதல்.

*மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், தேவைகள் குறித்து சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை வளர்ப்பதிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதிலும் அரசின் உறுதிப்பாட்டை இந்த முன்முயற்சி குறிக்கிறது.

***

PLM/DL


(Release ID: 2092878) Visitor Counter : 28


Read this release in: Hindi , English , Urdu