பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியரசு தின அணிவகுப்பு 2025-ன் முழு ஒத்திகையைக் காண்பதற்கான அனுமதிச் சீட்டுகளை ஆமந்திரன் தளம், செயலி மூலம் பெறலாம்

प्रविष्टि तिथि: 14 JAN 2025 5:01PM by PIB Chennai

குடியரசு தின கொண்டாட்டங்கள் (ஆர்டி.சி) 2025-க்கான பதிவுச் சீட்டுகளைப் பெற முன்னெப்போதும இல்லாத ஆர்வம் காணப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, 2025 ஜனவரி 23,  அன்று புதுதில்லியின் கடமைப் பாதையில் நடைபெறவுள்ள அணிவகுப்பின் முழு ஒத்திகையைக் காண பாதுகாப்பு அமைச்சகம் அனுமதிச் சீட்டுகளை வழங்குகிறது. அனுமதிச் சீட்டுப் பதிவை பின்வரும் செயலி / தளத்திலிருந்து பயனர் நேரடியாகப் பெறலாப்:

ஆமந்திரான் இணையதளம் (aamantran.mod.gov.in)

அனுமதிச் சீட்டுகளுக்கான பதிவு 2025 ஜனவரி 13 அன்று தொடங்கியது. ஜனவரி 17 வரை அனுமதிச் சீட்டுகளைப் பெறலாம்.

குடியரசு தினக் கொண்டாட்டங்கள் - 2025 தொடர்பான தகவல்களை rashtraparv.mod.gov.in என்ற தளத்தில் பார்க்கலாம்.

***

PLM/DL


(रिलीज़ आईडी: 2092863) आगंतुक पटल : 103
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali