புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் ஆண்டுக்கு ஆண்டு 15.84%வளர்ச்சியை பதிவு செய்துள்ளது

Posted On: 13 JAN 2025 1:09PM by PIB Chennai

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அறிவித்துள்ளது. 2023 டிசம்பர் -  2024 டிசம்பர் இடையேயான குறிப்பிடத்தக்க சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது.

2024 டிசம்பர் நிலவரப்படி, நாட்டின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் 209.44 ஜிகாவாட்டை எட்டியுள்ளது. இது 2023  டிசம்பர்  மாதத்தின் 180.80 ஜிகாவாட்டுடன் ஒப்பிடும்போது 15.84% அதிகரிப்பைக் குறிக்கிறது. 2024-ம் ஆண்டில் மொத்த எரிசக்தி திறன் சேர்ப்பு 28.64 ஜிகாவாட்டாக இருந்தது. இது 2023-ம் ஆண்டின் 13.05 ஜிகாவாட்டுடன் ஒப்பிடும்போது 119.46% ஆண்டு வளர்ச்சியை குறிக்கிறது.

2024 ஆம் ஆண்டில், சூரிய சக்தி 24.54 ஜிகாவாட் சேர்க்கப்பட்டது .  2023-ல் ஒட்டுமொத்த நிறுவுதிறன் 73.32 ஜிகாவாட்டிலிருந்து 2024-ம் ஆண்டு 97.86 ஜிகாவாட்டாக அதிகரித்து உள்ளது.  இது 33.47% அதிகரிப்பாகும்.  காற்றாலை எரிசக்தியும் இந்த விரிவாக்கத்திற்கு பங்களித்துள்ளது. 2024-ம் ஆண்டில் கூடுதலாக  3.42 ஜிகாவாட் காற்றாலை மின்சாரம் நிறுவப்பட்டது. இது மொத்த காற்றாலை எரிசக்தியை 48.16 ஜிகாவாட்டாக அதிகரித்தது.  2023-ம் ஆண்டில் இருந்து இது 7.64% வளர்ச்சியாகும்.

 

***

(Release ID: 2092429)
TS/IR/RR


(Release ID: 2092455) Visitor Counter : 24