மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கால்நடைப் பொருளாதாரத்தை மாற்றியமைத்தல்: புனேவில் நாளை மெகா “தொழில்முனைவு மேம்பாட்டு மாநாட்டைத்” தொடங்கி வைக்கிறார், மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்

Posted On: 12 JAN 2025 12:46PM by PIB Chennai

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, மகாராஷ்டிராவின் புனேவில் 2025 ஜனவரி 13 அன்று "தொழில்முனைவோருக்கு அதிகாரமளித்தல்: கால்நடை பொருளாதாரங்களை மாற்றியமைத்தல்" என்ற கருப்பொருளில் தொழில்முனைவு மேம்பாட்டு மாநாட்டை ஏற்பாடு செய்கிறது. இந்த மாநாட்டில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்வார். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.  சிங் பாகேல் மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.  மகாராஷ்டிர துணை முதலமைச்சர் திரு. அஜித் பவார், மகாராஷ்டிர அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் திருமதி பங்கஜா பிரதன்யா முண்டே மற்றும் மாநில அரசின் அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கால்நடை பராமரிப்புச் செயலாளர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்களுடன் துறையின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள்.

கால்நடைத் துறையின் திறனை வெளிக்கொணரும் வகையில் கொள்கை வகுப்பாளர்கள், கூட்டமைப்புகள், கூட்டுறவுகள், தொழில் சங்கங்கள், தொழில்முனைவோர் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றை ஒன்றிணைப்பதே இந்த  மாநாட்டின் நோக்கமாகும்.  இது பங்குதாரர்களுக்கு சவால்களை விவாதிக்கவும், தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், மதிப்பு கூட்டுதல் மற்றும் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நிலையான நடைமுறைகளை வழங்கவும் ஒரு தளத்தை வழங்குகிறது. மத்திய அரசு, ரூ.29110.25 கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மற்றும் ரூ.2300 கோடி மதிப்பீட்டில் தேசிய கால்நடை இயக்கம் போன்ற முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசிய கால்நடை இயக்கம் மற்றும் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், இந்த மாநாடு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இயக்கவும், கிராமப்புற விவசாயிகள் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கவும் முயல்கிறது.

தொழில்முனைவு மேம்பாட்டு மாநாடு, தேசிய கால்நடை இயக்கம் - தொழில் முனைவு மேம்பாட்டுத் திட்ட தகவல்பலகையின் அறிமுகம், முழு திட்டத்தின் முக்கிய தகவல்களின் ஒழுங்கமைக்கப்பட்ட தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்குகிறது. ரூ .545.04 கோடி மதிப்புள்ள 40 திட்டங்களைத் தொடங்கி வைப்பது, தேசிய கால்நடை இயக்க செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் 2.0 மற்றும் வெற்றிக் கதை கையேடுகள் வெளியீடு ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த மாநாட்டில் "கால்நடைத் துறையில் வளர்ச்சியை ஊக்குவித்தல்: தொழில்முனைவு, பதப்படுத்துதல் மற்றும் வாய்ப்புகள்" மற்றும் "கால்நடைத் துறையில் வங்கிகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு" ஆகிய தலைப்புகளில் குழு விவாதங்களும் நடைபெறும். இதில் அரசு, தொழில்துறை தலைவர்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் கூட்டமைப்புகள் மற்றும் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2092206

 

****

RB/DL


(Release ID: 2092220) Visitor Counter : 29


Read this release in: English , Urdu , Marathi , Hindi