மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடை தடுப்பூசி கண்டுபிடிப்பு பற்றிய அறிவியல் மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற்றது
Posted On:
11 JAN 2025 1:54PM by PIB Chennai
பத்திரிகை தகவல் அலுவலகம்
இந்திய இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் மற்றும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் இணைந்து, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, ஜனவரி 10, 2025 அன்று ஹைதராபாத்தில் "தொற்றுநோய் தயாரிப்பு மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பு பற்றிய மாநாட்டை" ஏற்பாடு செய்தது.
மாநாட்டை நித்தி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் வினோத் கே பால் துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர், எதிர்கால தொற்றுநோய்களை திறம்பட எதிர்கொள்ள கால்நடை உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஆரம்பகால கண்டறிதல் மற்றும் வளர்ந்து வரும் நோய்களுக்கு விரைவான பதிலை உறுதி செய்வதற்கான நோயறிதல் வசதிகளை மேம்படுத்துவது இதில் அடங்கும். அடுத்த தலைமுறை விலங்கு தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கான மேம்பட்ட தளங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். 100 நாட்கள் காலக்கெடுவுடன் தொற்றுநோய்களுக்கான தயார்நிலை, எதிர்கால தொற்றுநோய்களை எதிர்கொள்ளவும் சரியான வழியாகும் என்று பால் வலியுறுத்தினார்.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் செயலர் திருமதி அல்கா உபாத்யாயா, சிறந்த உற்பத்தித்திறனுக்காக விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு அரசு அதிக செலவு செய்ய வேண்டும் என்றும், கடைசி மைல் டெலிவரியை பயனுள்ளதாக்க சப்ளை செயின் மற்றும் குளிர் சங்கிலி அமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணைச் செயலாளர் (கால்நடை சுகாதாரம்) திரு ராம சங்கர் சின்ஹாவும் கலந்து கொண்டார்.
இந்தியா உலகளாவிய தடுப்பூசி மையமாக அறியப்படுகிறது, 60% க்கும் அதிகமான தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன மற்றும் 50% க்கும் அதிகமான தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ஹைதராபாத்தில் இருந்து செயல்படுகின்றனர். கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையானது கால்நடைகளுக்கு உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசின் 100% நிதியுதவியுடன் கால் மற்றும் வாய் நோய்க்கு எதிரான தடுப்பூசிக்காக செயல்படுத்தி வருகிறது.
***
PKV/KV
(Release ID: 2092061)
Visitor Counter : 32