ஜல்சக்தி அமைச்சகம்
நமாமி கங்கா இயக்கத்தின் கீழ் மகா கும்பமேளா 2025-க்காக சிறப்பு தூய்மை நடவடிக்கைகள்
Posted On:
10 JAN 2025 4:42PM by PIB Chennai
தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் கீழ், மகா கும்பமேளா 2025-க்காக ரூ.152.37 கோடி செலவில் சிறப்பு தூய்மை மேலாண்மை நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த முயற்சிகள் நவீன தொழில்நுட்பத்தை பாரம்பரிய நடைமுறைகளுடன் இணைத்து சுத்தமான, நிலையான சூழலை உறுதி செய்கின்றன.
கங்கையின் தூய்மையைப் பராமரித்தல், பயனுள்ள கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் இல்லாத மண்டலங்களை உருவாக்குதல் ஆகியவை மகா கும்பமேளா 2025-ன் முன்னுரிமைகளாகும்.
செப்டிக் டேங்குகள் பொருத்தப்பட்ட 12,000 பிளாஸ்டிக் கழிப்பறைகள், உறிஞ்சும் குழிகளுடன் கூடிய 16,100 எஃகு கழிப்பறைகள் என கண்காட்சி மைதானம் முழுவதும் 28,000-க்கும் அதிகமான கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இவை தூய்மையை உறுதி செய்யும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கூடுதலாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், பக்தர்களுக்கு வசதியான, சுகாதாரமான அனுபவத்தை உறுதி செய்வதற்காக 20,000 சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மகா கும்பமேளா 2025 வெறும் மத நிகழ்வு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மைக்கான ஒரு முன்மாதிரி எடுத்துக்காட்டாகும். கங்கையின் தூய்மையை பராமரிப்பது, நிலையான கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் இல்லாத மண்டலங்களை உருவாக்குவது ஆகியவற்றில் அரசின் முயற்சிகளை இது எடுத்துக்காட்டுகிறது. மஹா கும்பமேளா 2025க்கான இந்த தூய்மை முயற்சி தற்போதைய தலைமுறையினருக்கு மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையினருக்கும் ஊக்கமளிக்கும்.
***
TS/SMB/RR/DL
(Release ID: 2091892)
Visitor Counter : 18