சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஐதராபாத்தில் தொற்றா நோய்கள் குறித்த தேசிய பயிலரங்கிற்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்பாடு
Posted On:
10 JAN 2025 10:03AM by PIB Chennai
மத்திய சுகாதார அமைச்சகம், தெலங்கானா அரசுடன் இணைந்து, 2025, ஜனவரி 8-9 தேதிகளில் தொற்றா நோய்கள் குறித்த இரண்டு நாள் தேசியப் பயிலரங்கை நடத்தியது. சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர்கள், தேசிய சுகாதார திட்ட இயக்குநர், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், சுகாதார வல்லுநர்கள், நாடு முழுவதிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்டோர் இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டனர்.தொற்றா நோய்களின் தடுப்பு, பரிசோதனை, மேலாண்மை மற்றும் சிகிச்சையளிப்பதற்கான உத்திகளை வலுப்படுத்துவதில் இந்தப் பயிலரங்கத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
மத்திய சுகாதாரச் செயலாளர் திருமதி புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, தொற்றா நோய்களின் அதிகரித்து வரும் சுமையை நிவர்த்தி செய்ய, துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் புதுமையான நடைமுறைகளின் அவசியத்தை வலியுறுத்தினார். "இந்த தேசிய பயிலரங்கு, தரமான சுகாதார சேவைகளுக்கான உலகளாவிய அணுகல் மற்றும் தொற்றா நோய்களால் ஏற்படும் முன்கூட்டிய இறப்பைக் குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, "ஆரோக்கியமான இந்தியா" என்ற அரசின் பார்வையை அடைவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியைக் குறித்தது" என்று அவர் கூறினார்.
மேலும், "இந்த மாநாடு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முன்னுரிமைகளை வகுக்க உதவும். அதேசமயம், தொற்றா நோய்களின் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு முறையை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை இந்தியாவின் 16வது நிதி ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கும்" என்று குறிப்பிட்டார்.
தொற்றா நோய்களின் இரண்டாம் நிலை மருத்துவமனைகளை வலுப்படுத்துவதற்கும், பரிசோதனை திட்டங்களை விரிவுபடுத்துவதற்கும், தமிழ்நாடு மற்றும் தெலங்கானாவின் சிறந்த நடைமுறைகள் பற்றி நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டன.
மாநாட்டில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட சுவாச நோய், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட முக்கிய நோய்களின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய விரிவான விவாதங்கள், கள வருகைகள் மற்றும் அறிவுப் பகிர்வு அமர்வுகள் இடம்பெற்றன. .
ஃபிட் இந்தியா மற்றும் ஈட் ரைட் இந்தியா போன்ற பிரச்சாரங்களின் பங்கை வலியுறுத்தும் அமர்வுகளுடன் சமூக அடிப்படையிலான தலையீடுகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டன. நாகாலாந்தின் முன்மாதிரியான புகையிலை பயன்பாட்டு நிறுத்தம் மற்றும் போதைப்பொருள் அகற்றும் முயற்சிகள் மற்றும் தெலுங்கானாவின் யோகா மற்றும் ஆரோக்கிய நடைமுறைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவை மற்ற மாநிலங்களுக்கு கடைபிடிக்கக்கூடிய மாதிரிகளாக முன்னிலைப்படுத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091673
TS/BR/KR
(Release ID: 2091673)
***
(Release ID: 2091711)
Visitor Counter : 17