நிதி அமைச்சகம்
நிதித்துறை செயலாளர் திரு துஹின் காந்த பாண்டே நிதி அமைச்சகத்தின் வருவாய் துறை செயலாளராக இன்று பொறுப்பேற்றார்
Posted On:
09 JAN 2025 4:17PM by PIB Chennai
தற்போதைய நிதித்துறை செயலாளர் திரு துஹின் காந்த பாண்டே, நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையின் செயலாளராக இன்று பொறுப்பேற்றார்.
அமைச்சரவையின் நியமனக் குழு புதன்கிழமை திரு பாண்டேவை நிதி அமைச்சகத்தின் வருவாய் துறை செயலாளராக நியமித்தது. திரு பாண்டே தொடர்ந்து நிதித்துறை செயலாளராகவும் தொடர்வார் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒடிசா கேடரின் 1987 தொகுதி இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரியான திரு பாண்டே, 24.10.2019 முதல் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை (டிஐபிஏஎம்) துறை செயலாளராகவும், 01.08.2024 முதல் பொது நிறுவனங்கள் துறை (டிபிஇ) மற்றும் 04.11.2024 முதல் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செயலாளராகவும் பணியாற்றினார்.
டிஐபிஏஎம்-மில் செயலாளராக பணியாற்றுவதற்கு முன்பு, திரு பாண்டே ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பின் பிராந்திய அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார். இவர், மத்திய அரசு மற்றும் ஒடிசா மாநில அரசாங்கத்தில் பல குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்துள்ளார்.
மத்திய அரசில் திட்டக் கமிஷன் (இப்போது நிதி ஆயோக்) இணைச் செயலாளர், அமைச்சரவை செயலகத்தின் இணைச் செயலாளர், வர்த்தக அமைச்சகத்தில் துணைச் செயலாளர் ஆகிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
திரு பாண்டே சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும், பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் (இங்கிலாந்து) எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்
***
TS/PKV/KV/KR/DL
(Release ID: 2091516)
Visitor Counter : 21