தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்தி இருவார விழாவை நடத்தியது
प्रविष्टि तिथि:
08 JAN 2025 6:40PM by PIB Chennai
அலுவல் மொழியான இந்தி மொழியை அலுவலகப் பணிகளில் ஊக்குவிக்கும் வகையில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் 2024 செப்டம்பர் 14 முதல் 29 வரை இந்தி இருவார விழா கொண்டாடப்பட்டது. கட்டுரை எழுதுதல், போன்ற பல்வேறு போட்டிகள் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்தி இருவார நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும் 2025 ஜனவரி 7 அன்று புதுதில்லியில் உள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் நடைபெற்றது. துறையின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா, இந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அறிவைப் பரப்பவும் ஊழியர்களை வலியுறுத்தினார். இதற்காக புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091233
***
TS/PLM/RS/DL
(रिलीज़ आईडी: 2091263)
आगंतुक पटल : 58