ஆயுஷ்
மகா கும்பமேளாவில் ஆயுஷ் சேவைகள் பக்தர்களின் அனுபவத்தை மேம்படுத்தும்: மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்
प्रविष्टि तिथि:
08 JAN 2025 5:56PM by PIB Chennai
வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளா 2025 ஜனவரி 13 முதல் பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள நிலையில், ஆயுஷ் இணை அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இந்த நிகழ்வில் ஆயுஷ் அமைச்சகத்தின் முன்முயற்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். முன் முயற்சிகள் குறித்து தமது திருப்தியை வெளிப்படுத்திய அமைச்சர், இந்த மாபெரும் நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களின் அனுபவத்தை வளப்படுத்துவதில் குழுவினரின் உறுதிப்பாட்டை பாராட்டினார்.
ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர், மகா கும்பமேளா என்பது லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்டம் மட்டுமல்ல என்று கூறினார். இது ஆன்மீகம், கலாச்சாரம், ஆரோக்கியம் ஆகியவற்றின் புனிதமான சங்கமமாகும். ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பாரம்பரிய ஆயுஷ் அமைப்புகளின் சக்தியை வெளிப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
பக்தர்களுக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்ய ஆயுஷ் அமைச்சகம் மாநில அரசுடன் இணைந்து மகத்தான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது என்று அவர் தெரிவித்தார். கும்பமேளா நடைபெறும் இடத்தில் பக்தர்களுக்கு விரிவான ஆயுஷ் சேவைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
24 மணி நேரமும் செயல்படும் ஆயுஷ் கிளினிக்குகள், பல்வேறு ஆயுஷ் அமைப்புகளின் இயற்கை மருத்துவ ஆலோசனைகள் போன்ற சேவைகள் வழங்கப்படும் என்றும் யோகா அமர்வுகளும் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் வளமான மருத்துவ தாவரங்களின் மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் வகையில் மூலிகைக் கண்காட்சி அமைக்கப்படும் எனவும் திரு பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091208
****
TS/PLM/RS/DL
(रिलीज़ आईडी: 2091237)
आगंतुक पटल : 66