நிதி அமைச்சகம்
55 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகள்
Posted On:
21 DEC 2024 8:23PM by PIB Chennai
55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி, கோவா, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், மேகாலயா, ஒடிசா மாநில முதலமைச்சர்கள், அருணாச்சல பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களின் துணை முதலமைச்சர்கள் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றங்கள், தனிநபர்களுக்கு நிவாரணம், வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகள், ஜிஎஸ்டி இணக்க நடைமுறைகள் தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் பின்வரும் பரிந்துரைகளை வழங்கியது.
பொருட்களின் ஜிஎஸ்டி வரிவிகிதங்களில் மாற்றங்கள்
சரக்கு
1904-சட்டத்தின் கீழ் வகைப்படுத்தக்கூடிய செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 5%-மாகக் குறைத்தல்.
மரபணு சிகிச்சைக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்க வேண்டும்.
அறிவிக்கை 19/2019 சுங்கவரிச் சட்டத்தின் கீழ் அமைப்புகள், துணை அமைப்புகள், உபகரணங்கள், பாகங்கள், துணை பாகங்கள், கருவிகள், சோதனை உபகரணங்கள், மென்பொருள் அசெம்பிளி / உற்பத்தி ஆகியவற்றிற்கு ஐஜிஎஸ்டி வரிவிலக்கு நீட்டிப்பு.
வணிக ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கல் மீதான இழப்பீட்டு செஸ் தீர்வை விகிதத்தை 0.1%-மாகக் குறைத்தல்.
எச்எஸ்என் 19 அல்லது 21-ன் கீழ் உணவுத் தயாரிப்புகளின் உணவுப் பொருள் வரி உள்ளீடுகள் மீதான சலுகை 5% ஜிஎஸ்டி விகிதத்தை தற்போதுள்ள நிலைமைகளுக்கு உட்பட்டு விளிம்பு நிலை மக்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்கு ஏதுவாக குறைக்கப்படுகிறது.
பொருட்கள் மற்றும் சேவைகளுடன் தொடர்புடைய பிற மாற்றங்கள்
18%-ல் குறிப்பிடப்பட்டவை தவிர மின்சார வாகனங்கள் உட்பட அனைத்து பழைய, பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனைக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை 12% முதல் 18% வரை உயர்த்துதல். 1200 சிசி அல்லது அதற்கு மேற்பட்ட 4000 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட நீளம் கொண்ட பழைய, பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் வாகனங்களின் விற்பனை, 1500 சிசி அல்லது அதற்கு மேற்பட்ட எஞ்சின் திறன் 4000 மிமீ நீளம் கொண்ட டீசல் வாகனங்கள், எஸ்யூவி வாகனங்களுக்கு பொருந்தும்.
-----
(Release ID: 2086873)
TS/SV/KPG/KR
(Release ID: 2090534)
Visitor Counter : 99